நல்லவேளை நயன்தாரா அப்போ வரல.. விருது விழா மேடையிலும் அதே பாட்டுத் தான்.. சிம்பு மனசுல என்ன இருக்கு?

சென்னை: நடிகர் சிம்பு சமீபத்தில் நடந்த விருது விழா நிகழ்ச்சியிலும் 'லூசுப் பெண்ணே' பாடலை பாடியது சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட ட்ரோல்களை சந்தித்து வருகிறது.

பிரபல யூடியூப் சேனல் நடத்திய விருது விழாவில் மணிரத்னம், ஏ.ஆர். ரஹ்மான், அல்லு அர்ஜுன், லோகேஷ் கனகராஜ், த்ரிஷா, சிம்பு, நயன்தாரா, ராஷி கன்னா, மிருணாள் தாகூர், பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வெந்து தணிந்தது காடு படத்திற்காக சிறந்த நாயகன் விருது நடிகர் சிம்புவுக்கு வழங்கப்பட்டது. அப்போது மேடை ஏறி பேசிய சிம்பு நடனம் ஆடியது மட்டுமின்றி அந்த பாட்டையும் அவரே விரும்பி பாடினார்.

Simbu again sung Loosu Penne song stirs Nayanthara love debate in social media

9ம் நம்பரை விடாத சிம்பு: வல்லவன் படத்தில் நடித்த போது சிம்புவும் நயன்தாராவும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். அதற்கு முன் இல்லாத அளவுக்கு அந்த படத்தில் சிம்புடன் படு நெருக்கமாக நயன்தாரா நடித்திருப்பார். மேலும், சிம்பு, நயன்தாரா தனிப்பட்ட முறையில் அடித்த லிப் லாக் போட்டோக்கள் எல்லாம் இணையத்தில் கசிந்து பரபரப்பை கிளப்பியது.

ஆனால், அந்த காதல் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. இருவரும் பிரேக்கப் செய்து பிரிந்தனர். அதன் பின்னர் வில்லு படத்தின் போது பிரபுதேவாவை காதலித்த நயன்தாரா அவரை திருமணம் செய்ய முடிவெடுத்தார். ஆனால், பிரபுதேவாவின் முன்னாள் மனைவி செய்த பிரச்சனை காரணமாக அந்த திருமணம் நின்று போனது. அதன் பின்னர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு குழந்தைகளுடன் சந்தோஷமாக இருந்து வருகிறார்.

இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளாத நடிகர் சிம்பு, தொடர்ந்து தனது படங்களின் அப்டேட்கள், ரிலீஸ் தேதி என எல்லாவற்றையும் 9ம் நம்பர் வரும் படி பார்த்துக் கொள்வது தொடர்ந்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டும் கலாய்க்கப்பட்டும் வருகிறது.

லூசுப்பெண்ணே பாடலை விடாத சிம்பு: நடிகர் சிம்பு எப்போது மேடை ஏறினாலும் வல்லவன் படத்தில் நயன்தாராவை நினைத்து எழுதி பாடிய அந்த 'லூசுப் பெண்ணே' பாடலை விடுவதே இல்லை. பத்து தல இசை வெளியீட்டு விழாவில் கூட அந்த பாடலைத் தான் பாடி இருந்தார்.

பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட் ஐகான் விருது விழாவில் கூட கேபிஒய் பாலா வெந்து தணிந்தது காடு படத்தில் இருந்து 'மறக்குமா நெஞ்சம்' பாடலைத்தான் பாட சொல்லி சிம்புவிடம் கேட்டார். ஆனால், உடனடியாக 'லூசுப் பெண்ணே' பாடல் பாடணுமா? என ரசிகர்களை பார்த்து கேட்டுவிட்டு மக்கள் எதை கேட்கிறாங்களோ அதைத்தானே பாட வேண்டும் எனக் கூறி விட்டு அந்த பாடலை பாடினார்.

Simbu again sung Loosu Penne song stirs Nayanthara love debate in social media

நல்லவேளை நயன்தாரா அப்போ வரல: சிம்பு பாடும் போது த்ரிஷா தான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். சிம்புவுக்கு பிறகு தான் நயன்தாரா அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சிம்பு பாடும் போது அங்கே நயன்தாரா இருந்திருந்தால் இன்னும் வேறலெவலில் எடிட்டர் எடிட் செய்து பஞ்சாயத்தைக் கூட்டியிருப்பார் என நெட்டிசன்கள் தற்போது வெளியான அந்த வீடியோவை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

சீக்கிரமாக சிம்பு திருமணம் செய்துக் கொண்டால் தான் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வரும் என்றும் அதுவரை அவர் அந்த பாடலையும் 9ம் நம்பரையும் விடமாட்டார் போல என ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X