தட்டிடலாமா.. சிம்புவுடன் கைகோர்க்க தயாரான அனிருத்.. சீக்கிரமே சம்பவத்தை எதிர்பார்க்கலாம் போல!
சென்னை: ஆஹா தமிழ் ஓடிடியின் துவக்க விழா நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
முதலமைச்சர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்த ஓடிடியை தொடங்கி வைத்தார்.
Recommended Video
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு மற்றும் அனிருத் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேடை ஏறிய அனிருத் மற்றும் சிம்பு இருவரும் இணைந்து பணியாற்றப் போவது குறித்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

டிஎன்ஏ
DNA என தனுஷ் மற்றும் அனிருத் காம்போவை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். 3 படத்தின் மூலம் அறிமுகமானவர் இசையமைப்பாளர் அனிருத். முதல் படத்தில் அவர் இசையமைத்த கொலவெறி பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. தொடர்ந்து பல படங்களில் பயணித்து வந்த இருவரும் இடையே ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக விலகினர்.

அடுத்த கூட்டணி
தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயனி எதிர்நீச்சல் படத்திற்கு இசையமைத்த அனிருத் தொடர்ந்து காக்கிச் சட்டை, ரெமோ, மான் கராத்தே, வேலைக்காரன், சமீபத்தில் வந்த டாக்டர் மற்றும் விரைவில் வரப் போகும் டான் என எஸ் என் ஏ கூட்டணியை ஆரம்பித்து பட்டையை கிளப்பி வருகிறார். மேலும், ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நடிகர்கள் படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

பீப் பாடல் சர்ச்சை
சிம்பு மற்றும் அனிருத் இருவரும் இணைந்து ஏற்கனவே படம் பண்ண வேண்டியது. ஆனால், இருவரும் இணைந்து உருவாக்கியதாக கூறப்பட்ட பீப் பாடல் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அந்த கூட்டணி அப்படியே நின்று போனது. இந்நிலையில், கூடிய விரைவில் இருவரும் இணையப் போவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அது தொடர்பாக இருவரும் மேடையில் அறிவித்து இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

ஆஹா ஓடிடி லாஞ்ச்
சென்னையில் நேற்று ஆஹா ஓடிடி தமிழ் தொடக்க விழா நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் ஆஹா தமிழ் ஓடிடியை தொடங்கி வைத்தார். உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்கள் உடனிருந்தனர். நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு மற்றும் அனிருத் கலந்து கொண்ட நிலையில், இருவரையும் ஒன்றாக மேடை ஏற்றினர்.

தட்டிடலாமா
அப்போது இருவரும் எப்போ ஒன்றாக இணைந்து படம் பண்ணப் போறீங்க என்கிற கேள்வியை தொகுப்பாளர்கள் கேட்க, தட்டிடலாமா என சிம்பு சொல்ல, அனிருத்தும் மேடையிலேயே சம்மதம் தெரிவித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வரும் சிம்பு, விரைவில் அனிருத் உடன் இசையில் ஒரு படத்தை பண்ணப் போகிறார் என்பது உறுதியாகி உள்ளது.

வேட்டி சட்டையில் டான்ஸ்
மேடை ஏறிய சிம்பு மற்றும் அனிருத் இருவரும் வேட்டி சட்டை அணிந்து அசத்தினர். சிலம்பாட்டம் பாடல் மற்றும் வேலைக்காரன் பட கருத்தவன்லாம் கலீஜா பாடல்கள் ஒலிக்க சிம்பு மற்றும் அனிருத் மேடையில் டான்ஸ் ஆடி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர். தமிழால் இணைவோம் என இருவரும் சமீபத்தில் செய்த விளம்பரமும் ஆஹா தமிழ் ஓடிடிக்காகத் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











