சிம்பு & கௌதம் - அப்புக் குட்டியை பார்த்து சிரித்தபடியே இருந்தார்களாம்... காரணம்தான் படத்தின் பலமே

சென்னை: பொன்னியின் செல்வன் மற்றும் நானே வருவேன் படங்கள் வருவதற்கு முன்னரே வெந்து தணிந்தது காடு தன்னுடைய வசூலை குவித்து விட்டது.

அதன் காரணமாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இயக்குநர் கவுதமிற்கு புல்லட் பைக்கையும் சிம்புவிற்கு கார் ஒன்றையும் பரிசளித்திருக்கிறார்.

இந்நிலையில் அதில் நடித்த அப்புக் குட்டு ஒரு சுவாரசியமான சம்பவம் ஒன்றை கூறியிருக்கிறார்.

வெந்து தணிந்தது காடு

வெந்து தணிந்தது காடு

இயக்குநர் கௌதமின் படங்களில் மிகவும் வித்தியாசமான திரைப்படமாக அமைந்தது வெந்து தணிந்தது காடு திரைப்படம். காரணம், முதன்முறையாக வேறு ஒருவரின் கதையை திரைப்படமாக்கி இருக்கிறார். இப்போது மீண்டும் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதையைத்தான் படமாக்க நினைத்திருப்பதாக கௌதம் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அப்புக் குட்டி

அப்புக் குட்டி

வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், அழகர்சாமியின் குதிரை போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அப்புக் குட்டி. அழகர்சாமியின் குதிரை திரைப்படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. அதன் பின்னர் நடிகர் அஜித் அவரை வைத்து எடுத்த ஒரு ஃபோட்டோ ஷூட் மூலம் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் அவருக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது.

கதையின் ட்விஸ்ட்

கதையின் ட்விஸ்ட்

படத்தின் ட்விஸ்ட் அவர்தான் என்று இறுதியில்தான் அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் படத்தின் துவக்கத்திலிருந்தே அவருடைய நடிப்பு அனைவரையுமே கவர்ந்தது. அவருடைய கதாபாத்திரம் அந்த ட்விஸ்டுக்கு உதவியதற்கு முக்கிய காரணம் இயக்குநர் கௌதமின் செயல்தான். முதலில் நடக்கும் சம்பவங்கள் அனைத்திற்கும் உங்கள் கதாபாத்திரம்தான் காரணம் என்று யாருமே அவரிடம் கூறவில்லையாம். படம் முழுக்க சிம்பு தன்னை அண்ணன் என்று அழைக்கும் அளவிற்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்துள்ளார்கள் என்ற மகிழ்ச்சியுடன் இருந்திருக்கிறார்.

கூடி சிரித்தார்கள்

கூடி சிரித்தார்கள்

கிட்டத்தட்ட அவருடைய பகுதிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் ஒரு நாள் படப்பிடிப்பின்போது நடிகர் சிம்பு, இயக்குநர் கௌதம் மற்றும் ஒளிப்பதிவாளர் அப்புக் குட்டியை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தார்களாம். ஒருவேளை கிண்டல் செய்கிறார்களோ என்று யோசித்துக் கொண்டிருந்தவர், ஏன் என்னை பார்த்து சிரிக்கிறீர்கள் என்று அவர்களிடமே கேட்டுவிட்டாராம். அதற்கு இந்த படத்தில் நடக்கும் சம்பவம் அனைத்திற்கும் நீங்கள்தான் காரணம் என்று கூற, அதைக் கேட்ட அப்புக் குட்டிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாம். அதன்பின்னர்தான் அந்தக் காட்சியை படமாக்கி இருக்கிறார்கள். ஒருவேளை இந்த சஸ்பென்சை முன்னரே கூறியிருந்தால், அது ஆரம்ப காட்சிகளில் அவருடைய நடிப்பில் பிரதிபலித்திருக்கும் என்று இயக்குநர் கௌதம் நினைத்திருப்பார் போல.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X