வெந்து தணிந்தது காடு ஷுட்டிங் முடிஞ்சுடுச்சா... ஒரே நேரத்தில் கெளதம் மேனன், சிம்பு பகிர்ந்த மாஸ் போட்டோ

சென்னை : வெந்து தணிந்தது காடு படத்தின் மாஸான போட்டோக்களை ஒரே நேரத்தில் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து அசர வைத்துள்ளனர் டைரக்டர் கெளதம் மேனனும், நடிகர் சிம்புவும். இதை பார்த்த ரசிகர்கள், ஷுட்டிங் முடிந்து விட்டதா என கேட்டுள்ளனர்.

பல ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு நடித்த ஈஸ்வரன் படமும் தோல்வி அடைந்ததால் அவரின் ரசிகர்கள் சோகமாகினர். ஆனால் அதனை போக்கும் வகையில் சிம்புவின் மாநாடு பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. பாராட்டு, சாதனை என அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. அதைத் தொடர்ந்து வரிசையாக மகா, பத்து தல, வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார், பெயரிடப்படாத படங்கள் என பல படங்களில் புக் ஆகி நடித்து வருகிறார் சிம்பு.

ஏப்ரல் மாத ரிலீஸ்

ஏப்ரல் மாத ரிலீஸ்

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் இறுதி கட்ட ஷுட்டிங் நடந்து வருவதாக சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேசனே பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். ஏப்ரல் 14 ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்தில் சிம்பு ஐந்து கெட்அப்களில் நடித்திருப்பதாக கூறி இருந்தார். இதைத் தொடர்ந்து சிம்பு நடிக்கும் கொரோனா குமார் படமும் இந்த ஆண்டிற்குள் ரிலீஸ் செய்யப்படும் என கூறி இருந்தார்.

ஒரு போட்டோ சொல்லிடுமே

ஒரு போட்டோ சொல்லிடுமே

சிம்பு செமயாக உடல் எடையை குறைத்து நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படம் பற்றிய அடுத்த அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இன்று டைரக்டர் கெளதம் மேனன், சீன் 62...டேக் ஒன் என்ற டேக் போர்டுடன் அமர்ந்திருக்கும் போட்டோ ஒன்றை பகிர்ந்திருந்தார். வெந்து தணிந்தது காடு படத்தின் செட்டில் எடுக்கப்பட்ட இந்த போட்டோவுடன், ஆயிரம் வார்த்தை சொல்வதை ஒரு போட்டோ சொல்லி விடும் என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

 கெத்து காட்டிய சிம்பு

கெத்து காட்டிய சிம்பு

இதே போல் சிம்புவும் வெந்து தணிந்தது காடு படத்தின் செட்டில் எடுக்கப்பட்ட போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார். Royal Enfield பைக்கில் செம பந்தாவாக அமர்ந்து போஸ் கொடுக்கும் போட்டோவை சிம்பு பகிர்ந்திருந்தார். சிம்பு மற்றும் கெளதம் மேனன் பகிர்ந்த இந்த போட்டோக்களை ரசிகர்கள் பலரும் லைக் செய்து, கமெண்ட் செய்து வருகின்றனர்.

 விரைவில் அடுத்த அப்டேட்

விரைவில் அடுத்த அப்டேட்

விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து சிம்பு - கெளதம் மேனன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் இது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சிம்புவின் பிறந்தநாளன்று இந்த படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதிய போஸ்டர் மட்டுமே வெளியிடப்பட்டது. விரைவில் இந்த படத்தின் ஷுட்டிங் முடிந்ததும் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X