Maha Twitter Review : ஹன்சிகாவின் நடிப்பு வேறலெவல் பயர்.. மஹா எப்படி இருக்கு?

சென்னை : சிம்பு மற்றும் ஹன்சிகா மோத்வானி நடித்த மஹா திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது.

Recommended Video

நண்பன் Simbu-க்கு நன்றி Hansika open from heart | Baby Manasvi, Maha Audio Launch | STR *Kollywood

இப்படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரித்துள்ளார். ரோமியோ ஜூலியட் படத்தின் இயக்குநர் லக்ஷ்மணிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய யு.ஆர்.ஜமீல் இப்படத்தை இயக்கி உள்ளார்.

நாயகியை மையமாகக் கொண்ட இந்த படத்தில் ஹன்சிகா லீட் ரோலில் நடித்துள்ளார். சிம்பு, ஸ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமைய்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இன்று வெளியான இப்படத்தை ட்விட்டரில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மஹா

மஹா

சிம்பு மற்றும் ஹன்சிகா மோத்வானி இணைந்து நடித்துள்ள இப்படத்தில்,விமானப் பெண்ணாக வரும் ஹன்சிகா மோத்வானி பைலட் ஜமீலாக வரும் சிம்புவை காதலிக்கிறார். இவர்களுக்கு பிறக்கும் பெண் குழந்தை கொல்லப்படுகிறது. குழந்தையை கொன்றது யார் என்பதை கதாநாயகி ஹன்சிகா கண்டுபிடிப்பது தான் படத்தின் கதை. மாலிக் ஸ்ட்ரீம்ஸ் மற்றும் எட்செட்ரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வேறலெவல் பயர்

வேறலெவல் பயர்

நீண்ட நாட்களுக்கு பிறகு ஹன்சிகா படத்தை திரையில் பார்த்த ரசிகர் ஒருவர், மஹா படத்தின் முதல் பாதியில் ஹன்சிகாவின் நடிப்பு நம்பமுடியாத அளவுக்கு உள்ளது. மேலும், இடைவெளியில் பிளாக் ட்விஸ்ட் வேற லெவல் ஃபயர் இரண்டாம் பாதிக்காக காத்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

நல்ல விமர்சனம்

நல்ல விமர்சனம்

ஹன்சிகாவின் 50வது திரைப்படமான மஹா படத்தை திரையில் பார்த்தேன். படம் காலையிலிருந்து நல்ல விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. மிக்க மகிழ்ச்சி ஹன்சு உங்களைத் திரையில் பார்த்து 4 வருடங்கள் ஆகிறது, இன்று நான் எப்படி என்னைக் கையாள வேண்டும் என்பதை வெளிப்படுத்த முடியாது. மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

லீட் ரோலில்

லீட் ரோலில்

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மஹா படத்தில் முதன்முறையாக அம்மாவாக ஹன்சிகா நடித்து அசத்தி உள்ளார். இந்த படத்தை திரையில் பார்த்த அவரது ரசிகர்கள். மஹா படத்தின் டைட்டில் கார்டு வந்ததும் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். பின்னணி இசை நன்றாக உள்ளது.

பக்கா கெமிஸ்டிரி

பக்கா கெமிஸ்டிரி

படத்தில் நடித்த அனைவருமே தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். மஹா சிறப்பான படமாக உருவாகி உள்ளது. இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள சிம்பு 40 நிமிடங்கள் வருகிறார். சிம்பு மற்றும் ஹன்சிகாவின் கெமிஸ்டிரி திரையில் சிறப்பாக வந்துள்ளது என ரசிகர்கள் ட்விட்டரில் தெறிக்கவிட்டு வருகின்றனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X