twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒடிடியில் சிம்பு படம்.. தயாரிப்பாளர் மீது இயக்குநர் அதிரடி வழக்கு.. பரபரக்கும் கோலிவுட்!

    |

    சென்னை: நடிகர் சிம்பு மற்றும் ஹன்சிகா நடிப்பில் உருவாகி உள்ள மஹா படத்தை ஒடிடியில் வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவு செய்ததை எதிர்த்து அந்த படத்தின் இயக்குநர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    Recommended Video

    ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படம்.. பயங்கர அப்செட்டில் விஜய் சேதுபதி.. இன்றைய டாப் 5 பீட்ஸில்! - வீடியோ

    தயாரிப்பாளர் வி. மதியழகனின் எட்செட்டெரா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் யு.ஆர். ஜமீல் மஹா படத்தை இயக்கினார்.

    திரையுலகம் முற்றிலும் முடங்கியது... நிச்சயம் மீண்டு வருவோம்.. விஜய் ஆண்டனி நம்பிக்கை !திரையுலகம் முற்றிலும் முடங்கியது... நிச்சயம் மீண்டு வருவோம்.. விஜய் ஆண்டனி நம்பிக்கை !

    வாலு படத்திற்கு பிறகு சிம்புவும் ஹன்சிகாவும் மீண்டும் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

    ஹன்சிகா படம்

    ஹன்சிகா படம்

    இயக்குநர் ஜமீல் இயக்கத்தில் நடிகை ஹன்சிகா லீடு ரோலில் நடித்து வந்த படம் மஹா. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சமந்தா, தமன்னா என பல முன்னணி நடிகைகளும் உமன் சென்ட்ரிக் கதைகளில் நடித்து கலக்கி வந்த நிலையில், ஹன்சிகா மஹா படத்தின் மூலம் அசத்தல் என்ட்ரி கொடுக்க நினைத்திருந்தார்.

    சிம்பு என்ட்ரி

    சிம்பு என்ட்ரி

    ஆனால், இடையே ஹன்சிகாவின் கணவர் கதாபாத்திரத்திற்கு நடிகர் தேர்வு நடந்துக் கொண்டிருந்த போது சிம்புவிடம் பேசி ஓகே சொல்ல வைத்தார் ஹன்சிகா. வாலு படத்திற்கு பிறகு மீண்டும் ஹன்சிகாவுடன் சிம்பு இந்த படத்தில் இணைந்த நிலையில், முற்றிலுமாக இது சிம்பு படமாகவே மாறிவிட்டது.

    என்ன கதை

    என்ன கதை

    ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் வருவதை போலவே இந்த படத்திலும் நடிகை ஹன்சிகா ஒரு விமான பணிப்பெண்ணாகவே நடித்துள்ளார். பைலட்டாக வரும் சிம்பு மீது ஹன்சிகாவுக்கு காதல் ஏற்பட இருவருக்கும் அழகான பெண் குழந்தை ஒன்று பிறக்கிறது. ஆனால், அந்த பெண் குழந்தை கொல்லப்படும் நிலையில், கொன்றவர்களை மஹா ஹன்சிகா எப்படி பழிவாங்குகிறார் என்பதே கதை. சிம்புவுக்கு என்ன ஆகிறது என்பது சஸ்பென்ஸ்.

    ஒடிடி ரிலீஸ் பஞ்சாயத்து

    ஒடிடி ரிலீஸ் பஞ்சாயத்து

    மஹா படத்தை ஒடிடியில் வெளியிட வேண்டும் என தயாரிப்பு தரப்பு கூறியதற்கு இயக்குநர் ஜமீல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து தயாரிப்புத் தரப்புக்கும் இயக்குநருக்கும் முட்டிக் கொண்டது. இந்நிலையில், இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாடி உள்ளார் இயக்குநர்.

    படத்தை முடிக்கவில்லை

    படத்தை முடிக்கவில்லை

    சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பாளருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள இயக்குநர் ஜமீல், படத்தின் சில காட்சிகள் முடிக்கப்படாமல் இருந்த நிலையில், எனது அனுமதியின்றி உதவி இயக்குநரை வைத்து தயாரிப்பாளர் படத்தை முடித்து ஒடிடியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர் என குற்றஞ்சாட்டி உள்ளார்.

    சம்பளம் தரவில்லை

    சம்பளம் தரவில்லை

    மேலும், இந்த படத்தை இயக்க 24 லட்சம் ரூபாய் சம்பளமாக பேசப்பட்ட நிலையில், இதுவரை வெறும் 8 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயை மட்டுமே தயாரிப்பாளர் கொடுத்துள்ளதாகவும், மீதமுள்ள 15 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மற்றும் தனது அனுமதியின்றி படத்தை முடித்ததற்கு நஷ்ட ஈடாக கூடுதலாக பத்து லட்சம் ரூபாயையும் தர உத்தரவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

    உயர்நீதிமன்றம் உத்தரவு

    உயர்நீதிமன்றம் உத்தரவு

    இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தயாரிப்பு நிறுவனத்துக்கு இதுதொடர்பாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். மேலும், உதவி இயக்குநர் அஞ்சு விஜய் மற்றும் உதவி ஒளிப்பதிவாளர் ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோரை வரும் மே 19ம் தேதி நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளார்.

    சிம்பு ஹன்சிகா சைலன்ட்

    சிம்பு ஹன்சிகா சைலன்ட்

    மஹா படத்தை சுற்றி இப்படியொரு பெரிய பஞ்சாயத்து நடைபெற்று வரும் நிலையில், நடிகர் சிம்பு மற்றும் ஹன்சிகா செம சைலன்ட்டாக உள்ளனர். யார் பக்கமும் சப்போர்ட் செய்யாமல் பிரச்சனை சுமூகமாக முடிந்து படம் ரிலீசானாலே போதும் என்ற நிலையில் ஹன்சிகா உள்ளாராம்.

    English summary
    Simbu and Hansika’s Maha movie director U.R. Jameel files a complaint against Producer of the film in Chennai High Court regarding ban against its OTT release.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X