ப்பா.. செம்ம்ம்ம்ம க்யூட்.. சும்மா சொல்லக்கூடாது.. சிம்புவும் நயனும்.. வேற மாதிரி இருக்காங்க!
சென்னை: ஃபேஸ் ஆப் மூலம் சிறு பிள்ளைகளாக மாற்றப்பட்ட சிம்பு மற்றும் நயன்தாராவின் போட்டோக்கள் இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றன.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் நாள்தோறும் பல புதிய கண்டுபிடிப்பு மக்கள் மத்தியில் பரிட்சயமாகி வருகிறது.
இருந்த இடத்தில் இருந்தே பல வேலைகளை செல்போன் மூலமாகவே செய்யும் பல ஆப்கள் மக்கள் மத்தியில் பெரும் வரபேற்பு பெற்று வருகிறது.

ஆண்களை பெண்களாகவும்
அந்த வகையில் இன்று ட்ரென்டிங்கில் இருக்கும் ஆப்தான் ஃபேஸ் ஆப். ஃபேஸ் ஆப் வசதியின் மூலம் ஆண்களை பெண்களாகவும் பெண்களை ஆண்களாகவும் அசால்ட்டாக மாற்றலாம். அதேபோல் இளைஞர்களை முதியவர்களாகவும், பெரியவர்களை சிறு பிள்ளைகளாகவும் காட்டலாம்.

பிரபலங்களின் போட்டோக்கள்
கடந்த சில நாட்களுக்கு முன்பு வைரலான இந்த ஆப் மூலம் தற்போது உள்ள இளம் நடிகர் நடிகைகள் வயதான பிறகு எப்படி இருப்பார்கள் என்று காட்டும் வகையில் பல பிரபலங்களின் போட்டோக்கள் வைரலானது.

வேற லெவல் வைரல்
கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட், டோலிவுட் என மொத்த இந்திய சினிமா பிரபலங்களின் போட்டோக்களும் வைரலானது. அப்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் தானும் தனது காதலியான நயன்தாராவும் குழந்தைகளாக இருந்தால் எப்படி இருப்போம் என ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோ வேற லெவலில் வைரலானது.

சிலாகிக்கும் ரசிகர்கள்
இந்நிலையில் தற்போது மீண்டும் தலை தூக்கியுள்ளது ஃபேஸ் ஆப். அதன் மூலம் கத்தி படத்தில் நடித்த விஜய் மற்றும் சமந்தா, துப்பாக்கி படத்தில் நடித்த விஜய் மற்றும் காஜல் அகர்வாலின் போட்டோக்களை ஃபேஸ் ஆப்பை பயன்படுத்தி சிறு பிள்ளைகளாக காட்டி சிலாகித்தனர் விஜயின் ரசிகர்கள்.

நாங்க என்ன தொக்கா?
நாங்கள் மட்டும் என்ன தொக்கா.. என வரிந்துக் கட்டிக் கொண்டு வந்துள்ளனர் சூர்யா மற்றும் சிம்புவின் ரசிகர்கள். இதில் சூர்யா தனது மனைவியான ஜோதிகாவுடன் இருக்கும் போட்டோவை ஃபேஸ் ஆப்பை பயன்படுத்தி சிறு பிள்ளைகளாக மாற்றியுள்ளனர். கறுப்பு நிற உடையில் இருவரும் செம க்யூட்டாக உள்ளனர்.

சிம்பு நயன்தாரா
இதேபோல் சிம்புவின் ரசிகர்களும் அட்டகாசப்படுத்தியுள்ளனர். சிம்புவும் நயன்தாராவும் ஒன்றாக நடித்த இது நம்ம ஆளு படத்தின் போட்டோவை ஃபேஸ் ஆப்பை பயன்படுத்தி க்யூட்டாக மாற்றியுள்ளனர். அதில் இருவரும் சிறு பிள்ளைகளாக அவ்வளவு அழகாக உள்ளனர்.

செம்ம க்யூட்
பார்க்கும் போதே பார்ப்பவர்களுக்கு எச்சில் ஊறும்படி உள்ளனர் இருவரும். சிம்பு சொல்லவே முடியாத அளவுக்கு செம ஹேண்ட்சமாக உள்ளார். இதே போல் நயன்தாராவும் குட்டி பெண்ணாக அள்ளும் அழகில் அசத்தலாக உள்ளார். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











