பண்டிகைக்காக காத்திருக்கும் மாநாடு... ரிலீஸ் தள்ளிபோக இது தான் காரணம்

சென்னை : சிம்பு தனது 45 வது படமான மாநாடு படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கி உள்ள அரசியல் படமான மாநாடு, கமர்ஷியல் கலந்து சொல்லப்பட்டுள்ள கதை.

கல்யாணி பிரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், மனோஜ் கே.பாரதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

Simbu and Venkat Prabhu target a special festive release

சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இது சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்திருந்தனர்.

தற்போது லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், முக்கியமான பண்டிகை நாளில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவும், வெங்கட் பிரபுவும் காத்திருப்பது தான். ரம்ஜானை முன்னிட்டு மே மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் சிம்பு முதல் முறையாக அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞர் வேடத்தில் நடித்துள்ளார். இதனால் இஸ்லாமிய பண்டிகை தினத்தில் படத்தை ரிலீஸ் செய்தால் அது படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கும் என படக்குழு நினைப்பது தான் இதற்கு காரணமாம்.

படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளனர். இதனை படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சியும் தனது ட்விட்டர் பதிவில் உறுதி செய்துள்ளார். தொடர்ந்து மாநாடு படத்தின் அப்டேட்களை வெளியிட்டது போல் ரிலீஸ் தேதியையும் அறிவிக்க உள்ளதாக கூறி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X