சிம்புவுடன் மோதும் விக்ரம் பரபரக்கும் கோலிவுட்... வெளியானது புதிய தகவல்!

சென்னை : ஈஸ்வரன் படவெற்றியை தொடர்ந்து சிம்புவுக்கு மாநாடு படம் அடுத்து வெளியாக உள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் முதல் முறையாக இணைந்து சியான் 60ல் நடித்து வருகின்றனர்.

வரும் ஆயுதபூஜைக்கு மாநாடு மற்றும் சியான் 60 படங்கள் மோதவிருப்பதாக தெரியவந்துள்ளது.

தன்னுடைய பாணியில்

தன்னுடைய பாணியில்

விக்ரமை தொடர்ந்து அவரது மகன் துருவ் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக ஆதித்ய வர்மா படத்தின் மூலம் அறிமுகமாகி கவனத்தைப் பெற்றார். இப்பொழுது விக்ரமுடன் இணைந்து சியான் 60ல் நடித்து வருகிறார் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய பாணியில் கேங்ஸ்டர் படமாக இயக்கி வருகிறார்.

அடுத்த மாதம் படப்பிடிப்பு

அடுத்த மாதம் படப்பிடிப்பு

கோப்ராவுக்கு முன்பாகவே சியான் 60 ரிலீசாகும் என சொல்லப்படும் நிலையில் இதுவரை பாதி படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ளது. அடுத்த மாதம் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டு ஒரே மாதத்தில் மீதமுள்ள படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்

ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்

ஈஸ்வரன் வெற்றியைத் தொடர்ந்து சிம்புவுக்கு அடுத்ததாக மாநாடு ரிலீசாக தயாராக உள்ளது. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருக்க சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். அனைத்து கட்ட படப்பிடிப்பு பணிகளும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. அரசியல் கலந்த ஆக்ஷன் திரைப் படமாக இப்படம் உருவாகி வருகிறது. இதில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார்.

மோத உள்ளது

மோத உள்ளது

இந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் ஆயுத பூஜைக்கு மாநாடு ரிலீஸ் ஆக உள்ளதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் இப்பொழுது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் சியான் 60 படமும் ஆயுத பூஜை தினத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகிவரும் மாநாடு மற்றும் சியான் 60 படங்கள் ஒரே நேரத்தில் ரிலீசாக இருப்பது கோலிவுட்டை பரபரக்க செய்துள்ளது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X