மக்கள் முட்டாள் கிடையாது... சூடான சிம்பு... பிக் பாஸ் அல்டிமேட்டின் வேற லெவல் ப்ரோமோ!
சென்னை :டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் நேரலையில் ஒளிபரப்பாகி வருகிறது பிக் பாஸ் அல்டிமேட்.
Recommended Video
நிகழ்ச்சியில் நேரம் ஒதுக்க முடியவில்லை என்று கூறி நடிகர் கமல் விலகிய நிலையில் தற்போது சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது வெளியாகியுள்ள புதிய ப்ரோமோவில் நடிகர் சிம்பு மிகவும் சூடாக போட்டியாளர்களிடம் பேசுவதை பார்க்க முடிகிறது.

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இந்த நிகழ்ச்சி ஐந்து சீசன்களை கடந்து ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வந்தது. நிகழ்ச்சிக்கு கிடைக்கும் வரவேற்பை அடுத்து இந்த நிகழ்ச்சி தற்போது பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது.

புதிய தொகுப்பாளர் சிம்பு
பிக் பாஸ் ஐந்து சீசன்களை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் அவர் சமீபத்தில் தன்னால் நேரம் ஒதுக்க முடியவில்லை என்று கூறி நிகழ்ச்சியிலிருந்து விலகினார். இதையடுத்து நடிகர் சிம்பு தற்போது இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வாரத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

வனிதா விஜய்குமார் குற்றச்சாட்டு
கமல் விலகியதை தொடர்ந்து நிகழ்ச்சியின் போட்டியாளராக இருந்த வனிதா விஜய்குமாரும் போட்டியிலிருந்து விலகும் முடிவை எடுத்தார். இது போட்டிக்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய அவர், இந்த நிகழ்ச்சி மிகவும் மோசமாக நடத்தப்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

நெகட்டிவ் விமர்சனங்கள்
உலகிலேயே மிகவும் மோசமான இடமாக பிக் பாஸ் வீடு இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். தனக்கு மன உளைச்சலை இந்த நிகழ்ச்சி கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதனால் இந்த நிகழ்ச்சி குறித்த நெகட்டிவ் விமர்சனங்கள் மற்றும் பப்ளிசிட்டி கிடைத்துள்ளது. இந்நிலையில் வெற்றிகரமாக 4வது வாரத்தை இந்த நிகழ்ச்சி எட்டியுள்ளது.

புதிய ப்ரோமோ
இந்நிலையில் நிகழ்ச்சியின் புதிய பிரமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்களை சிம்பு வறுத்தெடுக்கிறார். டாஸ்க்கை செய்வதில் என்ன பிரச்சினை என்று கேட்கிறார். வெளியிலிருந்து ஆடியன்ஸ் பார்க்கிறார்கள் என்ற நினைப்பே இல்லாமல் அவர்கள் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டுகிறார்.

சிம்பு காட்டம்
அனைத்தும் தெரிந்த இந்த போட்டியாளர்கள் ஓட்டுப் போடும் மக்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றும் அந்த ப்ரோமோவில் கூறுகிறார் சிம்பு. நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் முட்டாள்கள் இல்லை என்றும் அவர் காட்டமாக தெரிவிக்கிறார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தமிழின் ட்விட்டர் பக்கத்தில் இந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











