எம்.ஆர். ராதா பயோபிக்: எம்.ஆர். ராதாவாக நடிக்கும் சிம்பு, எம்.ஜி.ஆர். அரவிந்த் சாமி

By Siva

சென்னை: நடிகவேல் எம்.ஆர். ராதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சிம்பு, அரவிந்த் சாமி ஆகியோர் நடிக்கிறார்களாம்.

சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தை இயக்கிய ஐக் தனது தாத்தா நடிகவேல் எம்.ஆர். ராதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கப் போவதாக ட்விட்டரில் அறிவித்தார்.

Simbu, Arvind Swamy to act in MR Radha biopic

ராதிகா சரத்குமார் தனது ராடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் மூலம் அந்த படத்தை தயாரிக்கிறார். படத்தில் சிம்பு எம்.ஆர். ராதாவாகவும், அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர். ஆகவும் நடிக்க உள்ளார்களாம்.

முன்னதாக செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு அரவிந்த்சாமியின் தம்பியாக நடித்திருந்தார். இந்நிலையில் அவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து நடிக்க உள்ளனர். எம்.ஆர். ராதாவின் மறுபக்கத்தை படத்தில் காட்டப் போகிறாராம் ஐக்.

இது குறித்து அவர் கூறியதாவது,

பலரும் அவரை வில்லனாக தான் திரையில் காட்டினார்கள். ஆனால் அவர் ஒரு நல்ல அப்பா. அது குறித்து குடும்பத்தாருக்கு மட்டுமே தெரியும். என் படத்தில் தாத்தாவின் கொள்கைகளை காட்டுவேன் என்றார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வரும் நிலையில் எம்.ஆர். ராதாவின் வாழ்க்கையும் படமாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X