Simbu: STR 48 லுக்கில் அம்மாவை சந்தித்த சிம்பு... விஜய் ரூட்டில் செம்ம வைப் கொடுக்குறாரே மனுஷன்!
சென்னை: கோலிவுட்டின் இளம் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான சிம்பு, தற்போது STR 48 படத்தில் கமிட்டாகியுள்ளார்.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.
STR 48 படத்திற்காக தாய்லாந்து, லண்டன் சென்று மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக்கொண்டு சென்னை திரும்பியுள்ளார் சிம்பு.
இந்நிலையில், தனது அம்மா உஷா ராஜேந்தரை சிம்பு நேரில் சந்தித்த போட்டோ வைரலாகி வருகிறது.

அம்மாவுடன் சிம்பு: குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி, இன்று கோலிவுட்டின் இளம் மாஸ் ஹீரோவாக கலக்கி வருகிறார் சிம்பு. அஜித் ஃபார்முலாவில் சிம்புவின் பல படங்கள் தோல்வி அடைந்திருந்தாலும், இவர்கள் இருவருக்குமே ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கின்றன. விக்ரம், பொன்னியின் செல்வன் படங்களின் இசை வெளியீட்டு விழாவில் சிம்பு கலந்துகொண்டபோது, ரசிகர்கள் அவருக்கு கொடுத்த வரவேற்பே இதற்கு சாட்சி எனலாம்.
இந்நிலையில் மாநாடு திரைப்படம் மூலம் கம்பேக் கொடுத்த சிம்பு, அடுத்தடுத்து வெந்து தணிந்தது காடு, பத்து பல படங்களில் கேங்ஸ்டர் மோடுக்கு மாறினார். இப்போது அதற்கும் மேல் மாஸ் காட்ட வேண்டும் என முடிவு எடுத்துவிட்டார் சிம்பு. அதன்படி ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் STR 48 படத்தில் கமிட்டாகியுள்ளார் சிம்பு. தேசிங் பெரியசாமி இயக்கவுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

STR 48 படத்திற்காக மீண்டும் தனது உடல் எடையை கொஞ்சம் அதிகரித்துள்ள சிம்பு, ஹேர் ஸ்டைலையும் மாற்றிவிட்டார். அதேபோல், தாய்லாந்து, லண்டன் நாடுகளில் மார்ஷியல் ஆர்ட்ஸையும் கற்றுக்கொண்டு சென்னை திரும்பியுள்ளார். இதனால் விரைவில் STR 48 ஷூட்டிங் தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் தனது அம்மாவை சந்தித்துள்ளார் சிம்பு.
விஜய்யை போலவே சிம்புவின் ஆரம்பகால வளர்ச்சியில் அதிகம் சப்போர்ட்டாக இருந்தது அவரது அம்மா அப்பா தான், டிஆர் ராஜேந்தர் இயக்கத்தில் உஷா ராஜேந்தர் தயாரித்த படங்களில் தான் சிம்பு முதலில் ஹீரோவாக நடித்து வந்தார். அதனால் தனது பெற்றோர் மீது எப்போதும் மரியாதையாக உள்ள சிம்பு, தற்போது அவரது அம்மாவை நேரில் சந்தித்து போட்டோ எடுத்துள்ளார்.
STR 48 லுக்கில் செம்ம மாஸ்ஸாக உள்ள சிம்பு, அவரது அம்மா உஷா ராஜேந்திர் அருகே நின்று எடுத்துள்ள இந்த போட்டோ, ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்திருந்த தனது அப்பா எஸ்.ஏ சந்திரசேகரை நேரில் சந்தித்தார் விஜய். அதே ரூட்டில் தற்போது சிம்புவும் அவரது அம்மாவுடன் போட்டோ எடுத்துள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











