Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்...
- News
சிலருக்கு என் "போட்டோ" மீதே கவலை! ‘கியூ’வை ஒழிச்சுட்டோம் - உலகமே நம்மை பார்த்து.. எதை சொல்றார் மோடி?
- Sports
தோல்விக்கு அருகில் இந்திய அணி.. இங்கி, விதியை மாற்றிய 2 வீரர்கள்.. வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது??
- Finance
மாஸ்டர் பிளான் போட்ட சந்திரசேகரன்.. இனி ஆட்டமே வேற..!
- Automobiles
முட்டி மோதி ஆளுக்கு ஒரு இடத்தை பிடித்த டாடா, ஹூண்டாய்... அசால்டா 8 இடங்களை தட்டி தூக்கிய மாருதி!
- Technology
யாரு நம்ம Xiaomiயா இது?- தலை சுத்த வைக்கும் விலை, ஆச்சரியப்பட வைக்கும் அம்சங்கள் உடன் Xiaomi 12S Ultra!
- Travel
த்ரில் நிறைந்த ரிவர் ராஃப்டிங் – தண்டேலியில் ஒரு சாகச அனுபவம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
ஒரே மேடையில் 2 பிக் பாஸ்.. விக்ரம் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிம்பு.. ரசிகர்கள் குஷி!
சென்னை: கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு பங்கேற்றுள்ளார்.
ரஜினிகாந்த், விஜய், சூர்யா உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், நடிகர் சிம்பு கலந்து கொண்டுள்ளார்.
முன்னாள் பிக் பாஸ் மற்றும் தற்போதைய பிக் பாஸ் என இருவரும் ஒரே மேடையில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் பயங்கர ஹேப்பி ஆகி உள்ளனர்.
உலக
மகா
நடிகன்ய்யா
நீ...தவிடு
பொடியாகும்
திட்டம்...குடும்பத்திடம்
வசமாக
சிக்கும்
கோபி

லோகேஷ் சம்பவம் லோடிங்
மாநகரம், கைதி, மாஸ்டர் என மூன்று படங்களை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறியுள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பகத் ஃபாசில் நடித்துள்ள விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி இன்று நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. விக்ரம் டிரைலரில் லோகேஷ் சம்பவத்தை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

சிம்பு பங்கேற்பு
ரஜினிகாந்த் பெயர் போட்ட சீட் உள்ளது என்றும் விஜய் மற்றும் சூர்யா கலந்து கொள்வார்கள் என்றும் ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், சத்தமே இல்லாமல் நடிகர் சிம்பு இந்த இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் செம ஸ்மார்ட் லுக்கில் கலந்து கொண்டு இருக்கிறார். இயக்குநர் பா. ரஞ்சித், அனிருத்தின் பெற்றோர் உள்ளிட்ட சில பிரபலங்களும் பங்கேற்றுள்ளனர்.

2 பிக் பாஸ்
விஜய் டிவியின் முன்னாள் பிக் பாஸ் கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் விழாவுக்கு புதிய பிக் பாஸ் சிம்பு கலந்து கொள்ளாமல் இருப்பாரா? பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் சிம்பு ஆஜரானதை பார்த்த ரசிகர்கள் ஒரே மேடையில் ரெண்டு பிக் பாஸ் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

ரொம்ப லேட்
விக்ரம் படத்தின் டிரைலர் 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் 8 மணிக்கு வெளியாகும் என தற்போது புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது கமல்ஹாசன் ரசிகர்களை உச்சகட்ட கோபத்திற்கு ஆளாகி உள்ளது. ரஜினிகாந்த் வருகைக்காக தாமதம் செய்யப்படுகிறதா? என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.