ஏஏஏ இயக்குனரை கதறவிட்ட சிம்பு: வைரலாகும் கடிதம்

By Siva

Recommended Video

ஏஏஏ இயக்குனரை கதறவிட்ட சிம்பு: வைரலாகும் கடிதம்- வீடியோ

சென்னை: அன்பானவன் அசராதவன் அடங்காதவன் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை சிம்பு கதறவிட்டது தொடர்பாக ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் நஷ்டம் அடைந்ததற்கு காரணம் சிம்பு என்று இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மைக்கேல் ராயப்பன் எழுதியதாக ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த கடிதத்தில் இருந்து சில விஷயங்கள்,

லட்சுமி மேனன்

லட்சுமி மேனன்

இன்டஸ்ட்ரியில் இருக்கும் எந்த கதாநாயகியும் சிம்புவுடன் நடிக்க தயாராக இல்லை. த்ரிஷா நடிக்க வாங்கிய அட்வான்ஸ் தொகையையும் திருப்பி தந்துவிட்டார். லட்சுமி மேனனை கொச்சினில் சந்தித்தும் மறுத்துவிட்டார். கடைசியில் ஸ்ரேயா ஒப்புக் கொண்டார்.

முடியாது

முடியாது

முதல் ஷெட்யூல் முடிந்த பிறகு அதே கெட்டப்பில் பாடல் படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் ஸ்ரேயா சரியில்லை. அதனால் அவளை நீக்கிவிட்டு திரும்பவும் படப்பிடிப்பு நடத்தலாம் என்றார். அவர் ஸ்ரேயாவுடன் மீண்டும் நடிக்க விரும்பாத காரணம் அவருக்கு மட்டுமே தெரியும்.

அழுகை

அழுகை

கடைசியாக மூன்றாவது கதாபாத்திரத்தில் நடிக்க சிம்பு விரும்பவில்லை, வரவில்லை. ஒரு வழியாக இயக்குனர் கதறி அழுது ஒரு மணி நேரம் தாருங்கள் 8 ஷாட் தான் என்று கேட்ட பின்னர் என் வீட்டிலேயே எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். அதன்படி எடுத்தோம்.

பாத்ரூம்

சரி ஷூட்டிங் தான் வரவில்லை. டப்பிங்க்கு வருவார் என்று நினைத்தோம். அதற்கும் வரவில்லை. வெளியில் வர மாட்டேன் என்றார். ரிலீஸ் தேதி நெருங்கி விட்டபடியால் அவர் வீட்டிலேயே (பாத்ரூம்) டப்பிங் பேசினார் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X