9ம் நம்பரை விட்ட சிம்பு.. பத்து தல ட்ரெய்லர் ரிலீஸ் டைம் என்ன தெரியுமா? மாற்றம் தொடருமா?

சென்னை: மாநாடு படத்தின் அறிவிப்பு முழுவதுமே 9 என்கிற கூட்டுத் தொகையில் வருவதை போலவே இருந்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

இந்நிலையில், பத்து தல படத்திலும் அந்த பந்தம் தொடரும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு டைட்டிலேயே ட்விஸ்ட் வைத்த நிலையில், தற்போது ட்ரெய்லர் ரிலீஸ் நேரத்தையும் மாற்றி இருக்கிறார் சிம்பு.

இயக்குநர் ஒபெலி என். கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி உள்ள பத்து தல படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று மாலை கோலாகலமாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

மீண்டும் ஸ்லிம்மான சிம்பு

மீண்டும் ஸ்லிம்மான சிம்பு

குண்டா ஆகணுமா ஆகுறேன், ஸ்லிம்மா ஆகணுமா இதோ வந்துட்டேன் என ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் பேலுக்கே டஃப் கொடுக்கும் விதமாக தனது உருவத்தை டோட்டலாக மாற்றி வரும் வித்தையை கற்று வைத்திருக்கிறார் சிம்பு. பத்து தல படத்துக்காக அதிக உடல் எடையை போட்ட சிம்பு அடுத்ததாக தேசிங் பெரிய்சாமி இயக்கத்தில் நடிக்க தனது தோற்றத்தையே டோட்டலாக மாற்றி உள்ளார்.

பத்து தல ஆடியோ லாஞ்ச்

பத்து தல ஆடியோ லாஞ்ச்

விஜய்யின் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா கடைசியாக நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிலையில், இன்று மாலை பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா இன்னும் சற்று நேரத்தில் அங்கே ஆரம்பமாக உள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பிரத்யேகமாக லைவ் இசை நடத்த உள்ளார்.

ட்ரெய்லர் ரிலீஸ் டைம்

ட்ரெய்லர் ரிலீஸ் டைம்

பத்து தல இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ள நிலையில், இரவு 10 மணிக்கு ஷார்ப்பாக பத்து தல ட்ரெய்லர் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. இந்த நேரத்தை பார்த்த ரசிகர்கள் இதிலும் மாற்றம் வந்துடுச்சே என கலாய்த்து வருகின்றனர்.

நம்பர் நயன் இல்லையா

நம்பர் நயன் இல்லையா

மாநாடு படம் முழுக்கவே சிம்பு பட அறிவிப்புகள் 9ம் நம்பரை குறி வைத்தபடியே இருந்த நிலையில், தனது பழைய காதலி நயன்தாராவை இன்னும் சிம்பு மறக்கவில்லை எனக் கூறி வந்தனர். இந்நிலையில், பத்து தல டைட்டிலுக்கு ஏற்ப பத்து தல ட்ரெய்லரை இரவு 10 மணிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், சிம்புவும் அதற்கு தாராளமாக க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

கமல் பங்கேற்பாரா

கமல் பங்கேற்பாரா

கமல் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் அடுத்ததாக சிம்பு நடிக்க உள்ள நிலையில், வெந்து தணிந்தது காடு இசை வெளியீட்டுக்கு வந்ததை போலவே பத்து தல இசை வெளியீட்டு விழாவுக்கும் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொள்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆடியோ லாஞ்ச் தேதியை கவனித்தீர்களா

ஆடியோ லாஞ்ச் தேதியை கவனித்தீர்களா

ஆனால், பத்து தல இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா தேதியே மார்ச் 18 என 1+8 = 9 வரும் படியாகவே சிம்பு பார்த்திருப்பதை பார்த்த ரசிகர்கள் தலைவன் தனது லக்கி சார்ம் நம்பரான 9ஐ அவ்வளவு சீக்கிரமாக விட மாட்டார் என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X