பிக்பாஸ் சீசன் 5 தொகுப்பாளர்...கமலுக்கு பதில் இனி இந்த மாஸ் ஹீரோ தானாம்

சென்னை : தமிழில் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட இந்த நிகழ்ச்சியின் கடந்த 4 சீசன்களையும் நடிகர் கமல ஹாசனே தொகுத்து வழங்கினார்.

Simbu being considered to host Bigg Boss session 5

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசன் வரும் ஜூன் மாதம் துவங்க உள்ளது. இதில் பங்கு பெறும் போட்டியாளர்கள் தேர்வு சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. போட்டியாளர்கள் பட்டியலில் நடிகர் நகுல் இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

அத்துடன் குக் வித் கோமாளி பிரபலங்களான கனி, பவித்ர லட்சுமி ஆகியோரையும் பங்கேற்க வைக்க முயற்சி நடந்து வருவதாக கூறப்படுகிறது. குக் வித் கோமாளி சீசன் 2 பட்டத்தை கனி தான் வெல்வார் என கூறப்பட்டு வரும் நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவரை பங்கேற்க வைக்க பிக்பாஸ் குழு முடிவு செய்துள்ளது.

கடந்த 4 சீசன்களை போல் இந்த சீசனையும் கமலே தொகுத்து வழங்குவார் என கூறப்படுகிறது. இருந்தாலும் தமிழக சட்டசபை தேர்தலில் அவர், தனது கூட்டணி கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதால், கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி கணிசமான இடங்களை கைப்பற்றினால், அவர் தீவிர அரசியலில் இறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அவ்வாறு கமல் முழு நேர அரசியலில் இறங்கினால் அவருக்கு பதில் பிக்பாஸ் சீசன் 5 ஐ தொகுத்து வழங்க நடிகர் சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். சன் டிவியில் விரைவில் துவங்கப்பட உள்ள சமையல் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ள நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சிம்பு தொகுப்பாளராக வரவும் வாய்ப்புள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X