38வது பிறந்தநாளை கொண்டாடும் சிம்பு.. பொருத்தமான ஜோடியாக இருந்த 5 நடிகைகள்.. யார் யார்னு பாருங்க!
சென்னை: நடிகர் சிம்பு இன்று தனது 38வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பொருத்தமான ஜோடியாக இருந்த நடிகைகள் யார் என்பது குறித்து பார்க்கலாம்.
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் சிம்பு. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள சிம்பு ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான வந்தா ராஜாவதான் வருவேன் என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு ஓவியா நடிப்பில் வெளியான 90எம்எல் படத்தில் நடித்தார் சிம்பு.

ஈஸ்வரன் படத்தில் சிம்பு
பின்னர் பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல், மாநாடு படம் இதோ அதோ என இழுபறியாக இருந்த நிலையில் ஒரு வழியாக அந்த படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியது. ஆனால் அந்த படம் ரிலீஸ் ஆவதற்குள்ளாகவே சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்தார் சிம்பு.

38வது பிறந்தநாள்
அந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆன நிலையில், தற்போது மகா, மாநாடு, பத்து தல என மூன்று படங்களில் பிஸியாக உள்ளார். இந்நிலையில் சிம்பு இன்று தனது 38வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

சிம்பு - த்ரிஷா
பல நடிகைகளுடன் ஜோடியாக சிம்பு நடித்துள்ள நிலையில் அவருக்கு ஸ்க்ரீனில் பொருத்தமாக இருந்த 5 நடிகைகள் யார் என்பது குறித்து பார்ப்போம். அந்த வகையில் முதலில் சிம்பு. த்ரிஷா ஜோடி. அலை மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இருவரின் கெமிஸ்ட்ரியும் ரொமான்ஸும் பலாராலும் கவரப்பட்டது. அவர்கள் இருவரும் கொரோனா லாக்டவுன் நேரத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் அவர்கள் மீண்டும் ஷார்ட் ஃபிலிம் ஒன்றில் இணைந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு - ஜோதிகா
அடுத்து ஜோதிகா.. சிம்புவும் ஜோதிகாவும் இணைந்து 4 படங்களில் நடித்துள்ளனர். அவற்றில் மன்மதன், சரவணா ஆகிய படங்களில் இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். இந்த இரண்டு படங்களிலுமே அவர்களின் ரொமான்ஸ் மற்றும் க்யூட் கெமிஸ்ட்ரி ஆகியவை ரசிக்கும்படியாக இருந்தது. தற்போது ஜோதிகா ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலேயே அதிகம் நடித்து வருவதால் இருவரையும் ஜோடியாக பார்க்க முடியவில்லை.

சிம்பு - ஹன்சிகா மோத்வானி
அடுத்து ஹன்சிகா மோத்வானி.. சிம்பு மற்றும் ஹன்சிகா மோத்வானி விஜய் சந்தர் இயக்கத்தில் வெளியான வாலு படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஆனால் சில காரணங்களால் இருவரும் பிரிந்துவிட்டனர். இந்த ஜோடிக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இதனிடையெ ஹன்சிகா மோத்வானியின் 50வது படமான மகா படத்தில் கேமியோ அப்பியரன்ஸ் கொடுக்கிறார் சிம்பு

சிம்பு - மஞ்சிமா மோகன்
அடுத்து மஞ்சிமா மோகன்.. கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். இருவரும் தங்களின் முதல் படத்திலேயே ரசிகர்களை பெரிதும் கவர்ந்து விட்டனர். மீண்டும் இருவரும் இணைந்து நடிக்க மாட்டார்களா என காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

சிம்பு - நயன்தாரா
அடுத்து நயன்தாரா.. சிம்பு நயன்தாரா ஜோடி தமிழ் சினிமாவில் பெஸ்ட் ஜோடி என்று சொல்லலாம். இருவருக்கும் இடையிலான காதல் முறிந்த பின்பும் கூட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளனர். இருவரும் ஒருவர் மீது ஒருவர் நல்ல மரியாதையை கொண்டுள்ளனர். நல்ல நட்பையும் பாராட்டி வருகின்றனர். இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடித்தால் இது பிளாக்பஸ்டர் ஹிட்தான் என்கின்றனர் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











