என்ன கொடுக்க ஹன்சிகாவுக்கு என்ன கொடுக்க: மண்டையை உடைக்கும் சிம்பு
சென்னை: தனது காதலி ஹன்சிகாவின் பிறந்தநாளன்று அவருக்கு என்ன பரிசு கொடுப்பது என்று தெரியாமல் சிம்பு மண்டையை போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறாராம்.
ஹன்சிகா தான் சிம்புவை காதலிப்பதை அண்மையில் தான் ஒப்புக் கொண்டார். மேலும் 5 ஆண்டுகள் கழித்து அவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஹன்சிகாவின் பிறந்தநாள் நாளை வருகிறது.

22வது பிறந்தநாள்
ஹன்சிகா தனது 22வது பிறந்தநாளை நாளை கொண்டாடுகிறார். ஹன்சிகாவுக்கு பிறந்தநாள் பரிசாக என்ன கொடுப்பது என்று தெரியாமல் மண்டையை போட்டு உடைத்துக் கொண்டிருப்பதாக சிம்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

குழந்தை தத்தெடுப்பு
ஹன்சிகா ஏற்கனவே 22 குழந்தைகளை தத்தெடுத்துள்ளார். இந்நிலையில் தனது பிறந்தநாளான நாளை அவர் மேலும் ஒரு குழந்தையை தத்தெடுக்கிறார்.

புற்றுநோய் பாதித்த பெண்கள்
மார்பக புற்றுநோயால் அவதிப்படும் 10 பெண்களின் மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்யவிருக்கிறார் ஹன்சிகா. பொண்ணு பார்க்க மட்டும் வெள்ளை இல்லீங்க மனசும் வெள்ளையாத் தான் இருக்கு.

பிரியாணி
ஹன்சிகா, கார்த்தியுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள பிரியாணி படம் வரும் செப்டம்பர் 6ம் தேதி ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











