தாய் தந்தை முன்னிலையில் இஸ்லாமுக்கு மாறிய சிம்பு தம்பி குறளரசன்!
நடிகர் சிம்புவின் தம்பி குறளரசன் முஸ்லிம் மதத்திற்கு மாறியுள்ளார்.
Recommended Video

சென்னை: டி.ராஜேந்தரின் இளையமகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர் எனப் பன்முகத் திறமையாளராக, மிகப்பெரிய வெற்றிப் படங்களைத் தந்தவர் டி.ராஜேந்தர். இவரது மூத்த மகன் நடிகர் சிம்பு. இளைய மகன் குறளரசன், சிம்பு நடித்த இது நம்ம ஆளு படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

தொடர்ந்து அப்பாவைப் போல் இசையமைப்பாளராக ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டார் அவர். ஆனால், அப்படத்திற்குப் பின் வேறு எந்தப் படத்திற்கும் அவர் இசை அமைக்கவில்லை.
இந்நிலையில், தன் பெற்றோர் சம்மதத்துடன் அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள மெக்கா மசூதியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
'எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையுடன் வாழ்வதால், மகனின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து இந்த முடிவிற்கு சம்மதித்ததாக' இது பற்றி டி.ஆர். தெரிவித்துள்ளார்.
நடிகர் சிம்பு தீவிர சிவபக்தர். அவரது தங்கை இலக்கியா கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகிறார். தற்போது குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











