ஓவியா படத்திற்காக கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கும் சிம்பு
Recommended Video

சென்னை: ஓவியாவின் படத்திற்காக சிம்பு தீயாக வேலை செய்து கொண்டிருக்கிறார்.
நடிப்பு, இயக்கம், பாட்டு பாடுவது என்று பிசியாக இருக்கும் சிம்பு ஓவியாவின் 90 எம்.எல். படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்திற்காக ஓவியா, சிம்பு, ஹரிஷ் கல்யாண் ஆகியோர் சேர்ந்து பாடிய மரண மட்ட பாடல் வெளியாகி ஹிட்டானது.
இந்நிலையில் 90 எம்.எல். படத்திற்கு இசையமைக்கும் வேலையில் பிசியாக உள்ளார் சிம்பு.
சிம்பு
90 எம்.எல். படத்திற்கு சிம்பு இசையமைக்கும் பணியில் ஈடுபட்டபோது எடுத்த வீடியோ வெளியாகி வைராகியுள்ளது. சிம்பு இருக்கும் தீவிரத்தை பார்த்தால் இசையில் தெறிக்கவிடுவார் என்கிறார்கள் ரசிகர்கள்.

சக்க போடு போடு ராஜா
சந்தானம் ஹீரோவாக நடித்த சக்க போடு போடு ராஜா படம் மூலம் தான் சிம்பு இசையமைப்பாளர் அவதாரம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது படங்களில் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் இசையமைக்கும் பணியிலும் கவனம் செலுத்தி வருகிறார் அவர்.

சுந்தர் சி.
சிம்பு சுந்தர் சி. இயக்கத்தில் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு அது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. இந்நிலையில் படத்தின் சிங்கிள் டிராக் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

வெங்கட் பிரபு
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் துவங்க உள்ளது. அரசியல் தலைவர்களுக்கு ஐடியா கொடுக்கும் சிம்பு இந்த படத்தில் அரசியல் பண்ணப் போகிறார். அதனால் தற்போதே படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











