மாநாடு 100வது நாள் கொண்டாட்டம்.. தியேட்டரில் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட சிம்பு!
சென்னை: மாநாடு படத்தின் 100வது நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் சிம்பு தனது ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு மகிழ்ந்த தருணத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
இப்போதெல்லாம் ஒரு புதிய படம் வெளியாகி இரண்டாவது வாரம் கடப்பதே பெரும் சிரமமாகி விட்ட சூழலில் 100வது நாளை கடந்திருக்கிறது சிம்புவின் மாநாடு.
டைம் லூப் படத்தை போலவே சிம்பு ரசிகர்கள் தொடர்ந்து லூப்பில் தியேட்டருக்கு வந்து படத்தை பார்த்து மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றியுள்ளனர்.

100வது நாள்
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான மாநாடு திரைப்படம். திரையரங்குகளில் வெற்றிகரமாக 100வது நாளை கடந்திருக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் ஒரு சினிமா 100 நாட்கள் தியேட்டரில் ஓடுவது என்பது மிகப்பெரிய விஷயமாக மாறிவிட்ட சூழலில் மாநாடு அந்த சாதனையை படைத்திருக்கிறது.

சிறப்பான கம்பேக்
உடல் எடையை குறைத்து நடிகர் சிம்பு குறுகிய காலக்கட்டத்தில் நடித்து முடித்த ஈஸ்வரன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத நிலையில், ரெட்கார்டு பிரச்சனைக்கு பிறகு நடிகர் சிம்புவுக்கு சூப்பர் கம்பேக்கை கொடுத்த படமென்றால் அது மாநாடு திரைப்படம் தான். தமிழில் ரசிகர்கள் அதிகம் பார்த்திராத டைம் லூப் கான்செப்ட்டை கச்சிதமாக திரைக்கதையாக வடிவமைத்து சிக்சர் அடித்திருந்தார் வெங்கட் பிரபு.

ரசிகர்களுடன் கொண்டாட்டம்
சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் இன்று மாநாடு படத்தின் 100வது நாள் கொண்டாட்டம் களைகட்டியது. அதில், கலந்து கொண்ட நடிகர் சிம்பு ரசிகர்களுடன் சந்தோஷமாக பேசி மகிழ்ந்த தருணங்கள் சிம்பு ரசிகர்களை உச்சகட்ட சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறது. வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் என பிக் பாஸ் சிம்புவுக்கு ஏகப்பட்ட படங்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன.
Recommended Video

மாஸ் செல்ஃபி
நெய்வேலியில் மாஸ்டர் படத்தை முடித்து விட்டு நடிகர் விஜய் எடுத்த மாஸ் செல்ஃபி சமூக வலைதளங்களில் வேற லெவலில் டிரெண்டான நிலையில், தற்போது தியேட்டரில் மாநாடு படத்தின் 100வது நாள் கொண்டாட்டத்தின் போது நடிகர் சிம்பு எடுத்துக் கொண்ட இந்த செல்ஃபிக்கு லைக்குகளும் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











