மாநாடு வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய சிம்பு.. சந்தோஷத்தில் சுரேஷ் காமாட்சி.. வைரலாகும் பிக்ஸ்!
சென்னை: மாநாடு திரைப்படத்தின் வெற்றியை கேக் வெட்டி நடிகர் சிம்பு கொண்டாடியுள்ளார்.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ள மாநாடு திரைப்படம் பல தடைகளை தாண்டி கடந்த வியாழக் கிழமை வெளியானது.
படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்களால் டிக்கெட் புக்கிங் அதிகரித்துள்ளது.

மாபெரும் மாநாடு
நடிகர் சிம்புவின் கரியரில் மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. விடுமுறை இல்லை வியாழக்கிழமை ரிலீஸ், மழை, ரிலீஸ் பிரச்சனை என பல தடைகளை கடந்து வெளியான மாநாடு திரைப்படம் நல்ல திரைக்கதை காரணமாக மக்கள் மனதில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.

அந்த சிம்பு படமல்ல
சிம்பு படம் என்றாலே குடும்பம் குடும்பமாக சென்று படத்தை பார்க்க முடியாது என்கிற பேச்சு அடிபட்டு இருந்த நிலையில், ஈஸ்வரன் படத்திலேயே அதனை மாற்றி விட்டார் நடிகர் சிம்பு. மாநாடு திரைப்படத்தை காண குடும்பம் குடும்பமாக மழையையும் பொருட்படுத்தாமல் நேற்று மக்கள் தியேட்டருக்கு படையெடுத்தனர்.

சக்சஸ் பார்ட்டி
மாநாடு திரைப்படம் அனைத்து இடங்களிலும் அனைத்து நடிகர்கள் ரசிகர்கள் மத்தியிலும் நல்லதொரு பாசிட்டிவ் ஆன வரவேற்பை பெற்று கலெக்ஷன் அள்ளி வரும் சூழலில் அதன் சக்சஸ் பார்ட்டியை நடிகர் சிம்பு கொண்டாடி உள்ளார். அதன் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

கேக் கட்டிங்
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் நடிகர் சிம்பு இருவரும் இணைந்து கேக் வெட்டி மாநாடு படத்தின் வெற்றியை கொண்டாடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் எங்கே காணோம் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
Recommended Video

விரைவில் வெற்றி விழா
முதல் வாரம் முடிந்து மிகப்பெரிய கலெக்ஷனை படம் அள்ளியதும் ஒட்டுமொத்த மாநாடு குழுவையும் கூட்டி விரைவில் மிகப்பெரிய வெற்றி விழாவை நடத்த மாநாடு படக்குழு தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மாநாடு படத்தின் வெற்றிக்காக உழைத்த படக்குழுவினருக்கும் தன்னை எப்போதுமே தாங்கி பிடிக்கும் ரசிகர்களுக்கும் நடிகர் சிம்பு நன்றி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











