twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாரே வா.. இதுவல்லவோ ஒற்றுமை... விஷாலுடன் பயங்கர நெருக்கமான சிம்பு!

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : மார்ச் 1 முதல் நடைபெற்று வந்த திரையுலகினரின் ஸ்ட்ரைக் கடந்த ஏப்ரல் 17 அன்று முடிவுக்கு வந்தது. நேற்று முதல் திரைப்படம் ரிலீஸ் ஆகத் தொடங்கியிருக்கிறது. டப்பிங், எடிட்டிங், கிராஃபிக்ஸ் பணிகள் உள்ளிட்ட வேலைகளும் நேற்று முதல் தொடங்கியிருக்கின்றன.

    நடிகர்கள் அதிக சம்பளம் பெறுவது தயாரிப்பாளர்களுக்குப் பெரும் சுமையாக இருப்பதாக பல வருடங்களாகவே குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. படங்களின் வெற்றி, தோல்வியில் ஹீரோக்களும் பங்குகொள்ள வேண்டும் என பலரும் கூறியிருக்கின்றனர்.

    தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் அதிக செலவினங்களைக் குறைத்தாலே டிக்கெட் விலையையும் குறைக்க முடியும் எனும் லாஜிக்கை பலரும் முன்வைத்து வருகின்றனர். இன்று நடிகர் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

    நடிகர் சங்க கூட்டம்

    நடிகர் சங்க கூட்டம்

    இந்நிலையில், இன்று மவுன்ட் ரோட்டில் இருக்கும் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடிகர் சங்க கூட்டம் நடைபெற்றது. தயாரிப்பாளர்களின் செலவினங்களைக் குறைப்பது தொடர்பாக நடிகர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

    நாசர் தலைமையில்

    நாசர் தலைமையில்

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, சுஹாசினி, அரவிந்த்சாமி, சிபிராஜ், கௌதம் கார்த்திக், சூரி, வரலட்சுமி, பரத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தருவதாகக் கூறியுள்ளனராம்.

    சிம்பு பங்கேற்பு

    சிம்பு பங்கேற்பு

    இதில் ஆச்சரியம் என்னவென்றால், நடிகர் சங்க நிர்வாகிகளுடன் மோதல் போக்கை கையாண்டு வந்த சிம்புவும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். எதிரும் புதிருமாக இருந்துவந்த விஷாலும், சிம்புவும் நெருக்கமாக தோளில் கைபோட்டுக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.

    சிம்பு ஐடியா

    சிம்பு ஐடியா

    நடிகர்களின் படங்களின் வசூல் விவரத்தை நடிகர்களுக்கும் தெரிவித்தால் அவர்களது சம்பளத்தைக் குறைத்துக் கொள்வார்கள் என சிம்பு சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியிருந்தார். அவரது கருத்தை ஏற்றுக்கொண்ட விஷால் அதுபற்றிய ஆலோசனையையும் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தெரிவித்துள்ளார்.

    நெருக்கம்

    நெருக்கம்

    ஜூன் 1 முதல் வெளிப்படையான கணினிமயமாக்கப்பட்ட டிக்கெட் விற்பனை முறை நடைமுறைத்தப்பட இருக்கிறது. இதனால், சிம்பு விஷாலோடு நெருக்கமாகி இருக்கிறார். நடிகர்களின் ஒற்றுமை ரசிகர்களையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. தமிழ் சினிமா உலகில் நிகழ்ந்து வரும் நல்ல மாற்றங்களின் பட்டியலில் இதுவும் மகிழ்ச்சிக்குரியது தான்.

    English summary
    Nadigar sangam meeting was held today. Actors and actresses have consulted on the reduction of producers costs. Vishal close to Simbu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X