தூத்துக்குடி சம்பவத்துக்கு கண்டனம்... அரசை தூக்கி எறிய சிம்பு வலியுறுத்தல்... வைரலாகும் வீடியோ
தூத்துக்குடி சம்பவத்துக்கு காரணமான தமிழக அரசை தூக்கி எறிய வேண்டும் என நடிகர் சிம்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: தூத்துக்குடி சம்பவத்துக்கு காரணமான தமிழக அரசை தூக்கி எறிய வேண்டும் என நடிகர் சிம்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த 22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் பேரணி சென்ற மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
நடிகர் சிம்புவும் தனது கண்டனத்தை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஆங்கிலத்தில் பேசியுள்ளார்.

என்ன தான் நடக்கிறது?
வீடியோவில் அவர் பேசியிருப்பதாகவது, "பிரச்னைகள், போராட்டங்கள், தற்போது உயிரிழப்பு. தமிழ்நாட்டில் என்ன தான் நடக்கிறது . தங்களின் அடிப்படை உரிமைக்காகவும், சுற்றுச்சூழலுக்காகவும் போராடிய மக்கள் சுடப்பட்டுள்ளார்கள். மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. மக்கள் போராடியது கடைசியில் இறந்து போவதற்கா?

அரசை நீக்க வேண்டும்:
தமிழகத்தில் என்ன தான் நடக்கிறது? மக்கள் தேர்ந்தெடுத்த தலைவர் இப்போது உயிருடன் இல்லை. அவர் எப்படி இறந்தார் என்றும் இதுவரை தெரியவில்லை. இந்த விஷயத்தில் தலைவர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நமக்கு இரங்கல் தேவையில்லை. நம்முடைய தற்போதைய தேவை மாற்றம். இந்த அரசை நீக்க வேண்டும்.

தீர்வை நோக்கி:
என்னுடைய நோக்கம் தீர்வை நோக்கி மட்டுமே உள்ளது. மற்றவை பற்றி எனக்குக் கவலை இல்லை. இந்த வீடியோவில் நான் அங்கிலத்தில் பேசி இருப்பதற்கு காரணம், இந்த சம்பவத்துக்கு பின்னால் இருப்பவர்களுக்கு இது போய் சேர வேண்டும் என்பதற்காக தான்.

வைரல் வீடியோ:
போராடுவதற்காக மக்கள் கூடும் போது காவல் துறையினர் இப்படிதான் செயல்படுவதா? மாநில அரசு இதுவரை என்ன செய்தது? இந்த அரசு நிச்சயமாக தூக்கியெறியப்பட வேண்டும்" என இவ்வாறு அவர் ஆவேசமாக பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











