ரஜினி ஸ்டைலில் தலையை கோதி விட்டு... நண்பர்களுக்கு சமைத்துப் போட்ட சிம்பு!

சென்னை : விண்ணைத்தாண்டி வருவாயா,அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களை தொடர்ந்து கௌதம் மேனன், சிம்பு இணைந்து நதிகளிலே நீராடும் சூரியன் என்ற படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர்.

இதுவரை பல கதாபாத்திரங்களில் ரசிகர்களை மகிழ்வித்த சிம்பு இப்போது கேங்ஸ்டர் டானாக பத்து தல படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ரஜினி ஸ்டைலில் தலையை கோதி விட்டு நண்பர்களுக்கு சமைத்து போட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில்

மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில்

சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஈஸ்வரன் மூலம் ஸ்லிம்மாக மாறி மீண்டும் கம்பேக் கொடுத்த சிம்பு அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தம் ஆகி நடித்து வருகிறார். மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் மற்றொரு படத்திலும் நடிக்க இருப்பதாக ஈஸ்வரன் ஆடியோ விழாவில் சிம்பு சொன்னதை அடுத்து அதன் முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

மூன்றாவது முறையாக

மூன்றாவது முறையாக

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா என இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட்டுகளை கொடுத்த சிம்பு கௌதம் மேனன் காம்போ இப்பொழுது மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இந்த முறையும் காதல் கதை களத்தை கொண்டு எடுக்கப்படும் படத்திற்கு நதிகளிலே நீராடும் சூரியன் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். வழக்கமான கௌதம் மேனன் படங்களைப் போல இந்தப் படத்திற்கும் பிரபல பாடல் ஒன்றில் இருந்து டைட்டில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழில் பத்து தல

தமிழில் பத்து தல

சாக்லேட் பாய், வில்லேஜ் பாய், சிட்டி பாய் , மன்மதன், வல்லவன் என பல அவதாரங்கள் எடுத்த சிம்பு தொட்டி ஜெயா - வுக்கு பிறகு பல வருடங்களுக்கு கழித்து மீண்டும் கேங்க்ஸ்டர் டானாக நடிக்கிறார். கன்னடத்தில் வெளியான மஃப்டி தமிழில் பத்து தல என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட இந்த படத்தை சில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் கிருஷ்ணா இயக்குகிறார். சிம்பு இதில் கேங்க்ஸ்டர் டானாக நடித்து வருகிறார். கௌதம் கார்த்திக் போலீஸ் அதிகாரியாகவும் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் தாசில்தார் அதிகாரியாகவும் நடிக்கின்றனர்.

ஸ்டைலில் பன்னீர் சமையல்

ஸ்டைலில் பன்னீர் சமையல்

அரசியல் ஆக்சன் கதைக்களத்தை கொண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் மாநாடு ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் சிம்பு நண்பர்களுக்கு செமயாக சமைத்துப் போட்ட வீடியோ இப்பொழுது வைரலாகி வருகிறது. பன்னீர் சமைக்கும்பொழுது நண்பருடன் பேசிக்கொண்டே ரஜினி ஸ்டைலில் தலையை கோதிவிட்டு சிம்பு செய்துள்ள இந்த ஸ்டைலில் பன்னீர் சமையல் வீடியோ இப்பொழுது இணையதளத்தில் வேற லெவலில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Read more about: simbu சிம்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X