Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்...
- News
சிலருக்கு என் "போட்டோ" மீதே கவலை! ‘கியூ’வை ஒழிச்சுட்டோம் - உலகமே நம்மை பார்த்து.. எதை சொல்றார் மோடி?
- Sports
தோல்விக்கு அருகில் இந்திய அணி.. இங்கி, விதியை மாற்றிய 2 வீரர்கள்.. வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது??
- Finance
மாஸ்டர் பிளான் போட்ட சந்திரசேகரன்.. இனி ஆட்டமே வேற..!
- Automobiles
முட்டி மோதி ஆளுக்கு ஒரு இடத்தை பிடித்த டாடா, ஹூண்டாய்... அசால்டா 8 இடங்களை தட்டி தூக்கிய மாருதி!
- Technology
யாரு நம்ம Xiaomiயா இது?- தலை சுத்த வைக்கும் விலை, ஆச்சரியப்பட வைக்கும் அம்சங்கள் உடன் Xiaomi 12S Ultra!
- Travel
த்ரில் நிறைந்த ரிவர் ராஃப்டிங் – தண்டேலியில் ஒரு சாகச அனுபவம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கதறி அழுத சிம்பு.. புரமோவை பார்த்து பதறிப்போன ரசிகர்கள்.. என்ன ஆச்சு?
சென்னை: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் புதிய ஹோஸ்ட்டாக பங்கேற்று பட்டையை கிளப்பி வரும் நடிகர் சிம்பு திடீரென கண் கலங்கி அழுத காட்சிகள் அடங்கிய புதிய புரமோ தற்போது வெளியாகி ரசிகர்களை பதற வைத்துள்ளது.
அடுத்த வாரம் பிக் பாஸ் அல்டிமேட்டின் கிராண்ட் ஃபினாலே நடைபெற போகிறது. இந்நிலையில், இந்த வார நிகழ்ச்சி செம சுவாரஸ்யமாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், பிக் பாஸ் ஹோஸ்ட்டான சிம்புவே அழுவதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
பிக் பாஸ் அல்டிமேட்டில் ஃபைனலிஸ்ட்டாக யார் யார் உள்ளே போகப் போகிறார்கள், 25 லட்சம் சூட்கேஸ் ஏப்ரல் ஏமாற்று வேலையா? என்பதை காண ரசிகர்கள் இன்னொரு பக்கம் காத்திருக்கின்றனர்.
வந்தாச்சு
பிக்
பாஸ்…
இனி
தினமும்
கொண்டாட்டம்
தான்…
குஷியான
ரசிகர்கள்
!

பெட்டியை தூக்கிய சுருதி
பிக் பாஸ் சீசன் 5ல் சிபி பெட்டியை தூக்கிக் கொண்டு கிளம்பிய நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ரூ. 15 லட்சம் பெட்டியுடன் சுருதி எஸ்கேப் ஆனார். இன்றைய ஷோவில் சிம்புவுடன் சுருதி பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 15 லட்சத்துக்கு பதில் 25 லட்சம் பெட்டி இருக்கு யார் சுருதியுடன் போட்டி போட வரீங்க என சிம்பு கேட்கும் புரமோ பட்டையை கிளப்பியது.

எவிக்ஷன் யார்
பிக் பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், பாலா, நிரூப், ஜூலி, தாமரை, ரம்யா இன்னும் செம ஸ்ட்ராங்காக விளையாடி வருகின்றனர். அபிராமி தான் இந்த வாரம் பிக் பாஸ் அல்டிமேட் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார் என உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.

டைட்டில் யாருக்கு
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஓடிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தீவிர ரசிகர்களை தவிர மற்றவர்கள் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனால், பிக் பாஸ் அல்டிமேட் கிராண்ட் ஓப்பனிங் விழா விஜய் டிவியில் ஒளிபரப்பானது போல கிராண்ட் ஃபினாலேவும் விஜய் டிவியில் ஒளிபரப்பானால் பல லட்சம் ரசிகர்கள் இந்த டைட்டிலை வெல்லப் போவது யார் என்பதை பார்த்து ரசிப்பார்கள். பாலாஜி முருகதாஸ், நிரூப், ஜூலி இந்த மூவரில் ஒருவருக்கு டைட்டில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக பட்ச மக்கள் ஓட்டுக்கள் பாலாவுக்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கதறி அழுத சிம்பு
இந்நிலையில், தற்போது வெளியான புதிய புரமோவில் நடிகர் சிம்பு கண் கலங்கி கதறி அழுத காட்சிகள் ரசிகர்களை பதற வைத்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டு பார்த்திருக்கிறோம். ஆனால், பிக் பாஸ் ஹோஸ்ட்டே இப்படி அழுகிறாரே என அனைவரும் இன்றைய ஷோவை காண ஆயத்தமாகி உள்ளனர்.

சிம்பு ஏன் அழுதார்
நிரூப் தனது அப்பா பற்றி பேசுவதை கேட்ட சிம்பு, தான் இந்த அளவுக்கு வளர்ந்து இந்த இடத்திற்கு உயர்ந்திருக்கிறேன் என்றால், அதற்கு முழு காரணமும் என் அப்பா அம்மா தான். எனக்கு அடுத்த ஜென்மத்தில் இப்படியொரு அம்மா அப்பா கிடைப்பாங்களான்னு தெரியாது என மனுஷன் நெகிழ்ச்சியுடன் அழுத காட்சிகள் புரமோவில் இடம்பெற்று வைரலாகி வருகின்றன.

கலாய்க்கும் ரசிகர்கள்
எனக்கு நடிக்கத் தெரியாதுங்க என சிம்பு விஜய் டிவியில் பண்ண டிராமாவை விட இந்த கண்ணீர் போர்ஷன் மிரட்டலா இருக்கே.. பிக் பாஸ் அல்டிமேட் கிராண்ட் ஃபினாலேவை பார்க்க இப்படியொரு டிராமாவா? என நெட்டிசன்கள் அந்த புரமோவுக்கு கீழ் ஏகப்பட்ட ட்வீட்களை போட்டு வருகின்றனர். இதற்கு ஐபிஎல் போட்டியையே பார்த்து விடலாம் என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன. ஆனால், சிம்பு பாசத்தோடு தனது அம்மா அப்பா பற்றி நினைத்து அழுதது அவரது ரசிகர்களை ரொம்பவே நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.