Don't Miss!
- News வேலி தாண்டிய வெள்ளாடு.. கோவை லாட்ஜ் டூ திருச்சி லாட்ஜ்.. வெறும் 14 வயசு தான்.. என்ன கொடுமை இதெல்லாம்
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கமல் பாட்டுக்கு மேடையில் குத்தாட்டம் போட்ட சிம்பு... வேற லெவல் டான்ஸ்!
சென்னை : நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் வரும் ஜூன் 3ம் தேதி ரிலீசாக உள்ளது. படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ள நிலையில் படத்தின் பிரமோஷன்கள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்றைய தினம் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு நடத்தப்பட்டுள்ளது.
விக்ரம் டிரைலரில் வரும் அந்த குழந்தை யார் தெரியுமா... யார் அந்த விக்ரம் ?
உலகநாயகன் கமல்ஹாசன்
உலகநாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா மற்றும் நரேன் உள்ளிட்டவர்களின் மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ளது விக்ரம் படம். 4 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் நடிப்பில் இந்தப் படம் உருவாகியுள்ளது. திரையில் கமல்ஹாசனை பார்க்கும் ஆர்வத்தில் உள்ள அவரது ரசிகர்களுக்கு இந்த படம் மிகவும் இனிப்பான வரவாக உள்ளது.
ஜூன் 3ல் ரிலீஸ்
படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். கமலின் தீவிர ரசிகரான அவர் ஒவ்வொரு பிரேமிலும் கமலை சிறப்பாக காண்பிக்கும் முயற்சியில் தான் ஈடுபட்டதாக முன்னதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தப் படம் வரும் ஜூன் 3ம் தேதி சர்வதேச அளவில் வெளியாகவுள்ளது.
இசை, ட்ரெயிலர் வெளியீடு
படத்தின் டீசர், போஸ்டர்கள் முன்னதாக வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றன. படத்தின் பத்தல பாடலும் வெளியிடப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த பாடலில் சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தியுள்ளார் கமல்ஹாசன். இந்நிலையில் நேற்றைய தினம் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு நிகழ்ச்சி சிறப்பான வகையில் நடைபெற்றுள்ளது.
சிறப்பு விருந்தினராக சிம்பு
நேற்றைய இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் ரஜினி, விஜய், சூர்யா கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி அவர்கள் கலந்து கொள்ளவில்லை. மாறாக படத்தின் சிறப்பு விருந்தினராக நடிகர் சிம்பு கலந்து கொண்டார். அவர் மேடையில் ஏறி கமல் மற்றும் படம் குறித்த பல விஷயங்களை பேசினார்.
சிம்பு கோரிக்கை
மருதநாயகம் படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கமலுக்கு கோரிக்கை விடுத்தார். கமல் 50 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் ஆனால் அந்த நிகழ்ச்சியில் பேச தனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார். ஆனால் இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் தனக்கு பேச வாய்ப்பு கிடைத்தது குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
கமல் பாடலுக்கு சிம்பு நடனம்
தொடர்ந்து படத்தின் பத்தல பாடலுக்காக அவர் படத்தின் நடன இயக்குநர் சாண்டி மாஸ்டருடன் இணைந்து மேடையில் நடனமிட்டார். இதையடுத்து ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் கைத்தட்டி மகிழ்ந்தனர். முன்னதாக அனிருத் பேசும்போது சிம்பு பேச வேண்டும் என்று ரசிகர்கள் கலாட்டா செய்து சத்தமிட்டது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
ரசிகர்கள் உற்சாகம்
நடிகர் சிம்புவுக்கு எப்போதுமே ரசிகர்கள் அதிகம். அந்த வகையில் அவர் இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அவரது ரசிகர்களை வெகுவாக உற்சாகப்படுத்தியுள்ளது. தொடர்ந்து அவரது மஹா, வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல போன்ற படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.