Simbu: சிம்புவுக்கு ஜோடியாகிறாரா தீபிகா படுகோன்... அப்போ STR 48-லும் பதான் ஸ்டைல் ட்ரீட் இருக்குமா?

சென்னை: பத்த தல படத்தைத் தொடர்ந்து சிம்பு தனது 48வது படத்தில் நடிக்கவுள்ளார்.

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள STR 48 படத்தை தேசிங் பெரியசாமி இயக்குகிறார்.

பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சிம்பு ஜோடியாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் தீபிகா படுகோனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

 Simbu: Deepika Padukone will be acting with Simbu in STR 48

சிம்புவுக்கு ஜோடியாகும் தீபிகா படுகோன்:சிம்பு அடுத்து STR 48 படத்தில் நடிக்கவுள்ளார். மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல மிரட்டிய சிம்புவுக்கு, STR 48 திரைப்படம் மிகப் பெரிய ஜாக்பாட்டாக அமைந்துள்ளது. தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கவிருந்த படத்தில் சிம்பு கமிட் ஆகியுள்ளார். அதேபோல், STR 48 படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு - தேசிங் பெரியசாமி கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. அதேநேரம் STR 48 படத்தின் நாயகி, மற்ற நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர், டெக்னீஷியன் டீம் குறித்து இன்னும் அப்டேட் வெளியாகவில்லை. இது அனைத்துமே படப்பிடிப்பு தொடங்கும் போது அறிவிக்கலாம் என படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

 Simbu: Deepika Padukone will be acting with Simbu in STR 48

முக்கியமாக சிம்புவுக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்பட்டது. இதில் முதலில் த்ரிஷாவின் பெயர் தான் அடிபட்டது. ஆனால், தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் தீபிகா படுகோன் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. STR 48 படத்தின் ஸ்கிரிப்ட்டுடன் தீபிகா படுகோனேவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இதனால், விரைவில் இதுகுறித்து அபிஸியல் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக தயார் செய்யப்பட்ட கதையில் சில மாற்றங்களுடன் STR 48 உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காகவே தாய்லாந்து சென்ற சிம்பு உடல் எடையை குறைத்ததுடன் மார்ஷியல் ஆர்ட்ஸையும் கற்றுக்கொண்டு திரும்பியுள்ளார். இதனால் STR 48 படத்தில் தரமான ஆக்‌ஷன் ட்ரீட் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதேநேரம் தீபிகா படுகோன் சிம்பு ஜோடியாக நடித்தால், பதான் படத்தில் இடம்பெற்றதை போன்ற பிகினி டான்ஸ் இருக்குமா என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X