தனுஷ் தயாரிப்பில் ‘காக்கா முட்டை’யில் நடிக்கும் சிம்பு
சென்னை: தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ்ன் தயாரிப்பில் உருவாகும் 'காக்கா முட்டை' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறாராம் சிம்பு.
சிம்புவும், தனுஷும் பரம எதிரிகள் என்ற கடந்த கால பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்து வருகின்றன சமீபத்திய நிகழ்வுகள். மேடைகளில் கட்டித் தழுவிக் கொள்ளும் இவர்கள் ஒருவ்ரைப் பற்றி ஒருவர் நல்ல விதமாகவும் விமர்சித்துக் கொள்கின்றனர்.
இந்நிலையில் அவர்களின் நட்பிற்கு சான்றாக, தனுஷ் தயாரிக்கும் படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வுண்டர் பார் பிலிம்ஸ் தயாரிப்பில்...
வுண்டர் பார் பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் நடிகர் தனுஷ். பல படங்களைத் தயாரித்த இந்நிறுவனம் தற்போது தனுஷ் நடிக்கும் ‘வேலையில்லா பட்டதார்' என்ற படத்தையும், காக்கா முட்டை என்ற மற்றொரு சிறுவர்கள் படத்தையும் தயாரித்து வருகிறது.

வெற்றிமாறன் கூட்டணி....
இதில் ‘காக்கா முட்டை' படம் இயக்குனர் வெற்றிமாறனின் கிளாஸ் ரூட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தோடு, வுண்டர் பார் பிலிம்ஸ் சேர்ந்து தயாரிக்கும் படைப்பு ஆகும்.

குழந்தைகள் படம்...
முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தை ஒளிப்பதிவாளர் மணிகண்டன் இயக்க, ஜி.வி.பிரகாஷ் இசை. சேரியில் வாழும் குழந்தைகளின் இருப்பிடம் மற்றும் அவர்களது வாழ்க்கையே படத்தின் கதைக்களம்.

காக்கா முட்டையில் சிம்பு....
இந்நிலையில், காக்கா முட்டையில் நடிக்க ஆர்வம் தெரிவித்த சிம்பு, படத்தில் சிறப்புத் தோற்றத்தில் தலை காட்ட இருக்கிறாராம். இதன் மூலம் சிம்பு, தனுஷ் நட்பின் ஆழம் அதிகரித்து வருவது வெளிப்படையாக தெரிய வந்துள்ளதாக கருதுகின்றனர் திரையுலகினர்,


Click it and Unblock the Notifications