மறுபடியும் வம்பு செய்கிறாரா சிம்பு?: உண்மை இதோ

By Siva

சென்னை: சிம்பு மறுபடியும் வம்பு செய்யத் துவங்கியுள்ளதாக பேச்சு கிளம்பிய நிலையில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

சிம்பு லண்டனுக்கு சென்று உடல் எடையை வெகுவாக குறைத்து பழைய சிம்புவாக நாடு திரும்பினார். ஒல்லியான சிம்புவை பார்த்த அனைவருமே வியப்படைந்தனர். சிம்பு எடையை குறைத்ததே வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடிக்கத் தான்.

இந்நிலையில் நாடு திரும்பிய மனிதர் அவர்பாட்டுக்கு மஃப்டி கன்னட படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க சென்றுவிட்டார்.

மஃப்டி

மஃப்டி

சிம்பு மஃப்டி ரீமேக்கில் நடிக்க சென்றதை பார்த்தவர்கள் அவர் மறுபடியும் வம்பு செய்து இயக்குநர்களை கதறவிடும் மூடுக்கு வந்துவிட்டார். இந்த சிம்பு எல்லாம் திருந்த வாய்ப்பே இல்லை. நடுவில் ஏதோ திருந்தியது போன்று சீன் போட்டு மார்க்கெட்டை சரிபடுத்தினார். மார்க்கெட் பிக்கப் ஆனதும் பழையபடி வம்புக்காரராக மாறிவிட்டார் என்று வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசினார்கள்.

வீடியோ

தன்னை பற்றி பலரும் பலவிதமாக பேசுவது குறித்து அறிந்தும் சிம்பு அமைதியாக இருந்தார். இந்நிலையில் சிம்புவை பற்றி வம்பு பேசியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் சிம்பு மாநாடு பட வேலையில் ஈடுபட்டுள்ளார். சிம்பு வெங்கட் பிரபுவை கதறவிடவில்லை. கொடுத்த வாக்கை காப்பாற்றியுள்ளார். அப்படியே மஃப்டி பட ரீமேக்கிலும் நடித்து வருகிறார்.

மாநாடு

மாநாடு

மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷன், நடிகை லிசியின் மகள் கல்யாணி நடிக்கிறார். மாநாடு படத்தில் சிம்பு அரசியல் பேசுவதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். முன்னதாக மாநாடு படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. இல்லை இல்லை படத்தை கைவிடவில்லை திட்டமிட்டபடி எடுத்து ரிலீஸ் செய்வோம் என்று வெங்கட் பிரபு விளக்கம் அளித்தார். இந்நிலையில் மாநாடு பட வேலைகள் துவங்கியது குறித்து அறிந்து சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தாதா

தாதா

சிம்பு பேட்டி அளித்து விளக்கம் அளிக்காமல் செய்கை மூலம் பதில் அளித்தது ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. இதற்கிடையே மஃப்டி படத்தின் ரீமேக்கின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அந்த படத்தில் சிம்பு தாதாவாகவும், கவுதம் கார்த்திக் போலீஸ் அதிகாரியாகவும் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X