பிளாஷ்பேக்குக்கு எதுக்கு 150 கோடி.. உள்ளே புகுந்து இயக்குநர் வேலையை காட்டிய சிம்பு.. அதே கதை தானா?
சென்னை: துல்கர் சல்மான், ரிது வர்மா, கவுதம் மேனன் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை பார்த்ததுமே இயக்குநர் தேசிங் பெரியசாமியை அழைத்து பாராட்டி இருந்தார் ரஜினிகாந்த்.
அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுக்க முடிவு செய்த ரஜினிகாந்த் அவரிடம் ஒரு கதையையும் ரெடி பண்ண சொன்னார்.
அதற்காக சில ஆண்டுகளையே வீணடித்து பெரிய பட்ஜெட் படத்தை உருவாக்கிய இயக்குநருக்கு கடைசியில் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு மிஸ் ஆனது. இந்நிலையில், அதே கதையில் சிம்பு நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

லாங் ஹேர்
அதற்காகத்தான் தற்போது லாங் ஹேர் வைத்துக் கொண்டு சிம்பு தனது தோற்றத்தையே புதிதாக மாற்றி உள்ளார் என்று கூறுகின்றனர். சூர்யா 42 படத்தில் வருவதை போல ஒரு பிரம்மாண்டமான பிளாஷ்பேக் போர்ஷன் தான் தேசிங் பெரியசாமியின் கதையிலே ஹைலைட் என்றும் அதற்கான பட்ஜெட் அதிகம் என்பதாலேயே இந்த கதையை கடைசியில் ரஜினிகாந்த் ஓகே பண்ணவில்லை என தகவல்கள் வெளியாகின.

தேசிங் பெரியசாமி
கடந்த 2020ல் இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரிது வர்மா, ரக்ஷன் விஜே, நிரஞ்சனி அகத்தியன் மற்றும் கவுதம் மேனன் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் கதையே வித்தியாசமாக இருந்த நிலையில், வேறலெவல் வெற்றியை அந்த படம் பதிவு செய்தது. அதன் பின்னர் ரஜினிக்கு படம் பண்ண ரெடியாகி இருந்த தேசிங் பெரியசாமி தற்போது சிம்புவை வைத்து இயக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

150 கோடி பட்ஜெட்டில் பிளாஷ்பேக்
பிரம்மாண்டமான இதிகாச பின்னணி கொண்ட பிளாஷ்பேக்கை தனது கதையில் வைத்திருக்கும் இயக்குநர் தேசிங் பெரியசாமி அந்த போர்ஷனுக்கு மட்டும் 150 கோடி செலவு ஆகும் என பட்ஜெட் கொடுத்த நிலையில் தான் தயாரிப்பாளர்கள் ஆடிப் போயுள்ளனர். ரஜினி சம்பளம் 100 கோடி பிளாஷ்பேக் மட்டுமே 150 கோடி என்றால் மொத்த படத்தின் பட்ஜெட் 300 கோடியை தாண்டினால் பாடி தாங்காது என பலரும் பின் வாங்கிய நிலையில், சிம்பு அந்த சுமையை தனது மதி நுட்பத்தால் குறைத்து விட்டார் எனக் கூறுகின்றனர்.

இயக்குநராக இறங்கிய சிம்பு
ஹீரோவாக நடிக்க வந்த சிம்பு அந்த ஃபிளாஷ்பேக் காட்சிக்கு ஏன் எதனால் 150 கோடி வரை பட்ஜெட் பிடிக்கிறது என்பதை ஒரு இயக்குநர் பார்வையில் அணுகிய நிலையில், உள்ளே புகுந்து சில பல சீர்திருத்த வேலைகளை ஸ்க்ரிப்ட்டில் செய்து அந்த ஃபிளாஷ்பேக் போர்ஷனின் பட்ஜெட்டை அப்படியே 30 கோடிக்கு குறைத்து விட்டார் என அதிரடியான தகவல்கள் கோடம்பாக்கத்தில் அனல் பறக்கின்றன.

இயக்குநரும் ஹேப்பி
தனது கதையில் எங்கேயும் கை வைக்காத வண்ணம் சிம்பு சரியான அணுகுமுறையுடன் இப்படியொரு பட்ஜெட் குறைப்பு வேலையை பார்த்த நிலையில், இயக்குநர் தேசிங் பெரியசாமியும் ஹேப்பி ஆகி உள்ளார் என்றும் படத்தின் பணிகளை விரைந்து ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர். தனது அடுத்த படம் மாஸ் காட்டும் என்பதை உணர்ந்த நிலையில் தான் பத்து தல இசை வெளியீட்டு விழாவில் அப்படியொரு ஸ்பீச்சை சிம்பு பேசியதாகவும் கூறுகின்றனர்.

கமலுக்கு நிம்மதி
ஒட்டுமொத்தமாகவே 100 கோடி பட்ஜெட்டில் சிம்புவின் சம்பளம் மற்றும் அந்த இதிகாச ஃபிளாஷ்பேக் போர்ஷன் உள்பட அனைத்தையும் எடுத்து விடலாம் என்கிற நம்பிக்கை வந்த நிலையில், தயாரிப்பாளர் கமல்ஹாசன் நிம்மதி பெருமூச்சு விட்டு படத்தை ஆரம்பிக்கும் பணிகளை வேகமாக செய்யுங்க என தனது டீமுக்கு சொல்லி விட்டாராம்.

சம்பளத்தையும் குறைத்த சிம்பு
40 கோடி ரூபாயாக அதிரடியாக தனது சம்பளத்தை உயர்த்தி இருந்த சிம்பு இந்த படத்தின் மீதுள்ள நம்பிக்கை காரணமாக 30 கோடி ரூபாய்க்கே நடித்துக் கொடுக்கவும் சம்மதம் சொல்லி விட்டார் என்றும் சினிமா வட்டாரத்தில் பேச்சுகக்ள் அடிபட்டு வருகின்றன. தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள இந்த படத்தில் கமல்ஹாசன் ஒரு சூப்பரான கேமியோவில் வரப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











