வெளிநாட்டு ஸ்டன்ட் மாஸ்டர்.. சிங்கிள் ஷாட்டில் வெந்து தணிந்தது காடு படத்துக்காக சிம்பு பண்ண சம்பவம்!

சென்னை: கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி உள்ள வெந்து தணிந்தது காடு படம் வரும் செப்டம்பர் 15ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், இந்த படத்தின் பிரத்யேக சண்டைக் காட்சி பற்றிய அப்டேட்ஸ் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன.

நார்த் கரோலினா நாட்டைச் சேர்ந்த ஸ்டன்ட் இயக்குநர் லீ விட்டேக்கர் சிங்கிள் ஷாட்டில் சிம்புவை வைத்து தரமான ஸ்டன்ட் காட்சி ஒன்றை படமாக்கி உள்ளாராம்.

இரவின் நிழல் எஃபெக்ட்டா

இரவின் நிழல் எஃபெக்ட்டா

பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் திரைப்படம் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படம் என அறிவிக்கப்பட்ட நிலையில், சிங்கிள் ஷாட் காட்சிகளின் பக்கம் நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் கவனம் அதிகளவில் திரும்பி உள்ளது. வெந்து தணிந்தது காடு படத்தில் நடிகர் சிம்பு சிங்கிள் ஷாட்டில் சண்டைக் காட்சி ஒன்றில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மாநாடு படத்தில்

மாநாடு படத்தில்

நடிகர் சிம்பு சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட் என்பது திரையுலகத்திற்கு நன்றாகவே தெரிந்த ஒன்றுதான். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்திலும் சிங்கிள் டேக்கில் அவரை கட்டி வைத்திருக்கும் போது வித விதமான வெரைட்டி நடிப்பைக் கொடுத்து டயலாக் பேசி நடித்து மனுஷன் பின்னி பெடலெடுத்து இருப்பார். இந்நிலையில், அடுத்ததாக அதே போன்ற ஒரு அட்டகாசமான காட்சி வெந்து தணிந்தது காடு படத்திலும் எதிர்பார்க்கலாம் என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன.

வெளிநாட்டு ஸ்டன்ட் இயக்குநர்

வெளிநாட்டு ஸ்டன்ட் இயக்குநர்

நார்த் கரோலினாவை சேர்ந்த ஸ்டன்ட் இயக்குநர் லீ விட்டேக்கர் தான் வெந்து தணிந்தது காடு படத்திற்கு சண்டை இயக்குநராக பணியாற்றி உள்ளார் என்கின்றனர். மேலும், தியேட்டரில் நடைபெற உள்ள 5 நிமிட சண்டைக் காட்சியை ஒட்டுமொத்தமாக சிங்கிள் டேக்கில் நடித்து அசத்தி இருக்கிறார் சிம்பு என்றும் கூறுகின்றனர். இது மட்டும் நிஜமாக இருந்தால், அந்த காட்சிக்கு தியேட்டரில் விசில் சத்தம் விண்ணைத் தாண்டி கிழிக்கும் என்பது சந்தேகமே இல்லை.

பாகுபலி 2வுக்கும்

பாகுபலி 2வுக்கும்

அஜித்தின் ஆரம்பம், விஜய்யின் புலி, கமலின் விஸ்வரூபம் 2, பாகுபலி இரண்டாம் பாகம் உள்ளிட்ட பல படங்களுக்கு சண்டை இயக்குநராகவும், ஸ்டன்ட் உதவி உள்ளிட்டவற்றை செய்துள்ளார் லீ விட்டேக்கர். தற்போது வெந்து தணிந்தது காடு படத்தில் ஸ்டன்ட் கோ ஆர்டினேட்டராக இவர் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

Kiruthika udayanaidhi |SIMBU காக BET கட்டினேன் | Paper Rocket Trailer| *Launch
கெளதம் மேனன் படங்களில்

கெளதம் மேனன் படங்களில்

பொதுவாகவே கெளதம் மேனன் படங்களில் தேவையில்லாத சண்டைக் காட்சிகள் இருக்காது. அப்படி இருந்தால், அந்த காட்சி மிரட்டி எடுத்து விடும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. வெந்து தணிந்தது காடு படத்தில் கையில் துப்பாக்கி உடன் அலையும் சிம்பு சிங்கிள் டேக்கில் எதிரிகளை எப்படி புரட்டி எடுக்கிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் செப்டம்பர் 15க்காக காத்திருக்க வேண்டிய சூழ்ல் உருவாகி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X