வருகிறார் கொக்கி குமார் ...'தொட்டி ஜெயா 2'வுக்கு வாய்ப்பிருக்கா? எதிர்பார்க்கும் சிம்பு ஃபேன்ஸ்!

By

சென்னை: தனுஷ் புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்தால், சிம்பு தொட்டி ஜெயா படத்தின் 2 ஆம் பாகத்தில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இயக்குனர் செல்வராகவன் அடுத்ததாக, 'புதுப்பேட்டை' படத்தின் அடுத்தப் பாகத்தை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்ட அவர், மாணவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும்போது, இதைச் சொன்னார்.

செல்வராகவன் - தனுஷ்

செல்வராகவன் - தனுஷ்

கடந்த 2006 ஆம் வருடம் செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் வெளியான படம், புதுப்பேட்டை. சினேகா, சோனியா அகர்வால், அழகம்பெருமாள், பாலாசிங் உட்பட பலர் நடித்திருந்தனர். பாலகுமாரன் வசனம் எழுதி இருந்தார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். தமிழில் வெளியான கேங்ஸ்டர் படங்களில் இந்தப் படத்துக்கு முக்கிய இடம் ஒன்று.

இரக்கமில்லாத ரவுடி

இரக்கமில்லாத ரவுடி

இதில் கொக்கி குமார் என்ற கேரக்டரில் நடித்திருப்பார் தனுஷ். அப்பாவி சிறுவன் ஒருவன் கொஞ்சம் கொஞ்சமாக இரக்கமில்லாத ரவுடியாக மாறுவதுதான் புதுப்பேட்டையின் கதை. தனுஷின் நடிப்பும் பாலகுமாரனின் வசனமும் யுவனின் இசையும் படத்தைத் தாங்கிப் பிடித்தன. என்றாலும் ரிலீஸ் ஆன நேரத்தில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை.

செல்வராகவன்

செல்வராகவன்

ஆனால், இப்போது இந்தப் படம் பற்றி அதிகமாகப் பேசி வருகிறார்கள். இந்நிலையில், இதன் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறார் செல்வராகவன். கொக்கி குமாரின் ரிட்டர்னை தனுஷ் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். இதில் வேறு யார், யார் நடிக்கிறார்கள், யார் தயாரிக்கிறார் என்ற விவரங்களை செல்வராகவன் வெளியிடவில்லை.

தொட்டி ஜெயா

தொட்டி ஜெயா

இந்நிலையில் கிட்டத்தட்ட புதுப்பேட்டை படத்தின் சாயலை கொஞ்சமாகக் கொண்டிருக்கும் படம், சிம்புவின் தொட்டி ஜெயா. இதுவும் கேங்ஸ்டர் படம்தான். தன்னை 15 வருடமாக வளர்த்த தாதாவிடம் அடியாளாக இருக்கும் ஹீரோ, யாரென்று தெரியாமல் அவர் மகளை காதலிப்பதும் தெரிந்த பின் நடக்கும் மோதலும்தான் கதை. இந்தப் படமும் வெளியானபோது பெரிதாகக் கவனிக்கப்படவில்லை.

ஹாரிஸ் ஜெயராஜ்

ஹாரிஸ் ஜெயராஜ்

வி.இசட் துரை இயக்கி இருந்த இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். 2005 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் கோபிகா, பிரதீப் ராவத், ஜி.எம்.குமார், சிலோன் மனோகர், வின்சென்ட் அசோகன் உட்பட பலர் நடித்திருந்தனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார்.

சிம்பு, கவனிக்கிறீங்களா?

சிம்பு, கவனிக்கிறீங்களா?

தனுஷின் புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக செல்வராகவன் அறிவித்துள்ளதை அடுத்து, சிம்பு ரசிகர்கள் தொட்டி ஜெயா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என்று கூறி வருகின்றனர். இன்றைய டிரெண்டுக்கு கதையை பக்காவாக மாற்றி இந்தப் படத்தை எடுக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர். சிம்பு, கவனிக்கிறீங்களா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X