ட்ரெய்லர் விடுற நேரமாய்யா இது?: சிம்பு ரசிகர்கள் அதிருப்தி #VRV
Recommended Video

சென்னை: வந்தா ராஜாவாதான் வருவேன் பட ட்ரெய்லர் வெளியான நேரத்தை பார்த்து சிம்பு ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சுந்தர் சி. இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் பட ட்ரெய்லர் நேற்று இரவு வெளியானது. ட்ரெய்லர் வெளியாகும் விஷயம் பலருக்கும் தெரியாது.
ட்ரெய்லரை வெளியிட சில நிமிடங்களுக்கு முன்பு தான் அது குறித்த அறிவிப்பு வெளியானது.
ட்ரெய்லர்
ட்ரெய்லர் வருகிறது என்று முன்கூட்டியே அப்டேட் எதுவும் கொடுக்காமல் இரவு 10 மணிக்கு வெயிளிட்டுள்ளீர்கள். ட்ரெய்லர் வெளியிடும் நேரமா அது என்று சிம்பு ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

டிரெண்ட்
ட்ரெய்லர் வெளியிடப் போவதாக அறிவித்திருந்தால் சிம்பு ரசிகர்கள் ட்விட்டரை அதிர வைத்திருப்பார்கள். இப்படி ஒரு சான்ஸ் வீணாகிப் போனதும் அவர்களின் வருத்தத்திற்கு காரணம். இரவோடு இரவாக வெளியிடுவது தான் தயாரிப்பு நிறுவனத்தின் திறமையா என்று கேட்டுள்ளனர்.
1 மில்லியன்
வந்தா ராஜாவாதான் வருவேன் ட்ரெய்லர் இரவோடு இரவாக வந்தாலும் அது வெளியாகி 12 மணிநேரத்திற்குள் 10 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

ட்ரீட்
ட்ரெய்லர் விஷயத்தில் மனக்கசப்பு இருந்தாலும் சிம்பு ரசிகர்களுக்கு ட்ரெய்லர் மிகவும் பிடித்துள்ளது. படத்தை நிச்சயம் தியேட்டரில் பார்த்து கொண்டாடுவோம் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











