Just In
- 6 min ago
இப்படியே பண்றாங்களே.. மர்மநபர்கள் கைவரிசை.. நடிகை நஸ்ரியா இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம்!
- 15 min ago
முன்னழகை திறந்து காட்டி அப்படி ஒரு போஸ்.. என்ன பிரியாமணி இதெல்லாம்!
- 16 min ago
ஸ்டார் அண்ட் மாஸ் ஹீரோ விஜய் சேதுபதி.. கடந்து வந்த பாதை ஒரு அலசல்!
- 31 min ago
‘களத்தில் சந்திப்போம்’ தைப்பூசத்தன்று ரிலீஸ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு!
Don't Miss!
- Automobiles
இந்தியா வரும் அசத்தலான டெஸ்லா மாடல் ஒய் எலெக்ட்ரிக் எஸ்யூவி... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!
- News
பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவாரா? உச்சநீதிமன்றத்தில் நாளை இறுதி விசாரணை
- Finance
உச்சத்தில் பெட்ரோல் டீசல் விலை.. உற்பத்தி குறைவு தான் காரணம்.. தர்மேந்திர பிரதான்..!
- Lifestyle
நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் வேணுமா? அப்ப இந்த பொருளை நெத்தில தேய்ங்க போதும்...
- Sports
உங்க கோட்டைக்கு வர சொன்னியாமே?.. தமிழக வீரர் அஸ்வின் செய்த வித்தியாசமான டிவிட்.. நெத்தியடி பதிலடி!
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சிம்பு சொன்னா செய்வோம்ல.. பால், பிஸ்கட் கொடுத்து புதுவையைக் கலக்கிய ரசிகர்கள்

புதுச்சேரி: அண்டா அண்டாவாக பால் ஊற்றுங்கள் என்று முதலில் சொன்னார். பின்னர் நான் சொன்னது வேறு, அப்படிச் செய்யாதீர்கள் என்றார். ஆனாலும் சிம்பு ரசிகர்கள் விடவில்லை. இன்று புதுச்சேரியைக் கலக்கி விட்டனர்.. ஆனால் வேறு மாதிரி.

புதுச்சேரியில் வந்தா ரஜாவாதான் வருவேன் திரைப்படத்தை பார்க்க வந்தவர்களுக்கு சூடான் பால் மற்றும் பிஸ்கட்டுகளை வழங்கி அசத்தி விட்டனர்.

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. புதுச்சேரியிலும் ரஜாவாதான் வருவேன் திரைப்படம் 5 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.
இதனிடையே ஏற்கனவே ரசிகர்கள் தனது பேனருக்கு பாலாபிஷேகம் செய்வது தொடர்பாக சிம்பு கூறியிருந்த கருத்து பல்வேறு சர்ச்சைகளை எழுப்பிய நிலையில், தனது திரைப்படம் வெளியாகும்போது படம் பார்க்க வருபவர்களுக்கு பால் கொடுங்கள் மற்றும் முடிந்த உதவிகளை செய்யுங்கள் என சிம்பு தனது ரசிகர்களுக்கு இறுதியாக ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதன்படி புதுச்சேரி மூலகுளம் பகுதியில் உள்ள வசந்த ராஜா திரையரங்கில் இன்று காலை ரசிகர் காட்சி திரையிடப்பட்டது. முன்னதாக திரையரங்க வாயிலில் வைக்கப்பட்டிருந்த சிம்புவின் பேனருக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தும், பேண்டு வாத்தியத்துடன் நடனமாடி மகிழ்ந்தனர்.
மேலும் சிம்பு தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்தியதின்படி திரைப்படம் பார்க்க வந்தவர்களுக்கு புதுச்சேரி மாநில சிம்பு ரசிகர் மன்ற நிர்வாகிகள் சூடான பால் மற்றும் பிஸ்கட்டுகளை வழங்கினர்.

பிரமாதம்யா