சிம்புவுக்கு நடுக்கடலில் பேனர் வைத்து பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்
Recommended Video

புதுச்சேரி: சிம்புவுக்கு நடுக்கடலில் பேனர் வைத்து பாலாபிஷேகம் செய்துள்ளார்கள் ரசிகர்கள்.
சுந்தர் சி. இயக்கத்தில் சிம்பு, கேத்ரீன் தெரசா, மேகா ஆகாஷ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் படம் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.
பாலாபிஷேகம்
வந்தா ராஜாவாதான் ரிலீஸையொட்டி புதுச்சேரியில் நடுக்கடலில் சிம்புவுக்கு பேனர் வைத்து பாலாபிஷேகம் செய்துள்ளனர். இதற்கு புதுச்சேரி மாநில சிம்பு தலைமை ரசிகர் மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.

சிம்பு
வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு பெரிய அளவில் பேனர்கள் வைத்து அண்டா அண்டாவாக பாலாபிஷேகம் செய்யுமாறு சிம்பு தனது ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் கடலில் பேனர் வைத்து பாலாபிஷேகம் செய்துள்ளனர்.
பாசம்
திருப்பூரில் ரசிகர்கள் சிம்புவின் போஸ்டரை கையில் ஏந்தியபடி பாலாபிஷேகம் செய்துள்ளனர். பட ரிலீஸுக்கு முன்பே ஆங்காங்கே பாலாபிஷேகத்தை துவங்கிவிட்டனர் ரசிகர்கள்.

வந்தா ராஜாவாதான் வருவேன்
சிம்பு சொல்லாமலேயே பேனர் வைத்து பாலாபிஷேகம் செய்து அமர்க்களப்படுத்துவார்கள் ரசிகர்கள். அப்படி இருக்கும்போது அவரே சொல்லிவிட்டார் என்றால் சும்மாவா இருப்பார்கள்.


Click it and Unblock the Notifications











