தப்புத் தப்பா யோசிக்காதீங்க சிம்பு ரசிகாஸ்: இது நம் கையில் இல்லை
சென்னை: வீடியோ ஒன்றை பார்த்துவிட்டு சிம்பு ரசிகர்களுக்கு பேராசை ஏற்பட்டுள்ளது.
யு.ஆர் ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து வரும் படம் மஹா. இது அவரின் 50வது படம். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள இந்த மஹா படத்தில் சிம்பு கவுரவத் தோற்றத்தில் நடிக்கிறார்.
சிம்பு தற்போது மஹா படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். பிரேக் இல்லாமல் அவர் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
மஹா
மஹா படப்பிடிப்பு தளத்தில் இருந்து இரண்டு வீடியோக்கள் கசிந்துள்ளன. ஒரு வீடியோவில் சிம்பு கெத்தாக நடந்து வருகிறார். மேலும் பிக் பாஸ் பிரபல் காயத்ரி ரகுராம் வாகனத்தில் நின்று கொண்டிருக்கிறார். மற்றொரு வீடியோவில் சிம்புவும், ஹன்சிகாவும் ஜீப்பில் அமர்ந்துள்ளனர்.

ஹன்சிகா
ஜீப் வீடியோவை பார்த்த சிம்பு ரசிகர்களோ தலைவன் எஸ்.டி.ஆரும்., ஹன்சிகாவும் காதலை புதுப்பித்துவிட்டனர் என்று கூறி மகிழ்கிறார்கள். அட ரசிகாஸ், அது நிஜ வீடியோ இல்லை. படப்பிடிப்பின்போது அதை வேடிக்கை பார்த்த யாரோ எடுத்தது. நிஜம் புரியாமல் நீங்களாக ஆசைப்பட்டு வாழ்த்துக் கூறுகிறீர்கள். இது நம் கையில் இல்லை. சிம்புவும், ஹன்சிகாவும் தான் முடிவு செய்ய வேண்டும்.

வாலு
வாலு படத்தில் நடித்தபோது காதலில் விழுந்து அந்த படம் ரிலீஸாகும் முன்பு பிரிந்து ஆளுக்கொரு பக்கம் சென்றுவிட்டனர் சிம்புவும், ஹன்சிகாவும். இந்த காதல் முறிவுக்கு நானும், ஹன்சிகாவும் காரணம் இல்லை என்றார் சிம்பு. பிரிந்துவிட்டாலும் ஹன்சிகாவும், சிம்புவும் ஒருவர் மீது மற்றொருவர் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர்.

சண்டை
முன்னாள் காதலர்களை ஒன்றாக நடிக்க வைத்தால் குழாயடி சண்டை போன்று ஆகிவிடும் என்பார்கள். ஆனால் சிம்பு, ஹன்சிகாவுக்கு அது பொருந்தாது. படப்பிடிப்பு தளத்தில் இருவரும் நல்ல நண்பர்களாக பழகுகிறார்கள். அவர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வதை பார்த்து படக்குழுவே வியப்பில் ஆழ்ந்துள்ளது. மஹா படத்தில் சிம்பு விமானியாகவும், ஹன்சிகாவின் காதலராகவும் நடிக்கிறார். இந்த விபரம் வெளியான பிறகு படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் சிம்பு படப்பிடிப்புக்கு முன் கூட்டியே வந்து அசத்திக் கொண்டிருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











