கொஞ்சம் படம் போடுற வரைக்கும் கம்முனு இருங்க அண்ணா.. மாநாடு தயாரிப்பாளரை பங்கம் பண்ண ரசிகர்கள்!

சென்னை: காலங்காத்தால 4 மணிக்கு தியேட்டர் வாசலில் நின்று கொண்டு நம்பிக்கையுடன் மாநாடு ரிலீசாகும் என காத்திருந்த ரசிகர்கள் இன்னமும் படம் எப்போ போடுவாங்கன்னு தெரியாம இருக்கும் நேரத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தொடர்ந்து பதிவிட்டு வரும் தத்துவ ட்வீட்கள் ரசிகர்களை அப்செட் ஆக்கி உள்ளது.

சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள மாநாடு திரைப்படம் முதலில் தீபாவளி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், தீபாவளிக்கு அந்த படம் வெளியாகவில்லை. ஒரே அடியாக நவம்பர் 25ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்ட நிலையில் இன்றும் ஸ்பெஷல் ஷோ ரிலீஸ் ஆகாமல் பிரச்சனையாகி விட்டது.

தயாரிப்பாளர் ட்வீட்

தயாரிப்பாளர் ட்வீட்

நேற்று முதலே படம் வெளியாகும் வெளியாகாது என ஏகப்பட்ட ட்வீட்களை போட்டு சிம்பு ரசிகர்களை கடுப்பாக்கி வருகிறார் மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. ஸ்பெஷல் ஷோ ரிலீசாகாத வேதனையில் ரசிகர்கள் தியேட்டர் வாசலில் காத்துக் கிடக்க தற்போது "எத்தனை இடர் வரினும் எதிர்த்து நின்று வெற்றி கொள்வோம். நான் வீழ்வேனென்று நினைத்தாயோ??!" என சுரேஷ் காமாட்சி போட்டுள்ள ட்வீட்டை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

சீக்கிரம் படத்தை போடுங்க

சீக்கிரம் படத்தை போடுங்க

கேடிம் ரிலீஸ் பண்ணி சீக்கிரம் படத்தை போடாமல் டயலாக் பேசிட்டு இருக்க.. இதெல்லாம் யாரு உங்க கிட்ட கேட்டா.. தியேட்டரில் ஃபர்ஸ்ட் ஷோ கேன்சலாம். இன்னும் கேட்டையே திறக்க மாட்றானுங்க அதுக்கு ஒரு வழி முதல்ல பண்ணுங்க என விளாசி வருகின்றனர்.

கெத்து காட்டுற நேரமா இது

கெத்து காட்டுற நேரமா இது

"கெத்து காட்ற நேரமா இது.. மொதல்ல எல்லா தியேட்டர்லயும் படம் ரிலீஸ் ஆகட்டும்.. அப்புறம் positive reviews வரட்டும்.. அப்புறம் என்ன வேணா பேசுங்க.. #மாநாடு #Maanaadu" என சிம்பு ரசிகர்கள் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியை சும்மா வச்சு செய்றாங்க..

இங்க கேட் திறக்கல

இங்க கேட் திறக்கல

"யோவ் நீ சும்மா இருய்யா.. இங்க கேட்ட திறக்க மாட்றானுங்க.." என மாநாடு திரைப்படம் மார்னிங் ஷோ கேன்சல் ஆன வருத்தத்தில் ரசிகர்கள் கொலை காண்டுல மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி போட்ட ட்வீட்டுக்கு கீழே கமெண்ட் அடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X