twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தோ.. வந்துட்டான் என் தாலியை கொத்தோட அத்துட்டு போக.. டிரெண்டாகும் #வரிகட்டுங்க_தனுஷ்

    |

    சென்னை: ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி கட்டுவதில் விலக்கு கேட்ட நடிகர் தனுஷின் வழக்கில் நீதிபதி சரமாரியாக அட்வைஸ்களை தனுஷுக்கும் அள்ளி வீசி உள்ளார்.

    Recommended Video

    Dhanush -யை வெச்சி செய்த நீதிபதி 2 நாளில் 30 லட்சம் கட்டுங்க! | Thalapathy Vijay, Rolls Royce

    நுழைவு வரியை நடிகர் தனுஷும் கட்டவில்லை என்பதை சிம்பு ரசிகர்கள் #வரிகட்டுங்க_தனுஷ் என டிரெண்ட் செய்து ட்விட்டரை தெறிக்க விட்டு வருகின்றனர்.

    போட்ரா வெடிய... அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? சும்மா அதிரப் போகுது போட்ரா வெடிய... அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? சும்மா அதிரப் போகுது

    48 மணி நேரத்திற்குள் நடிகர் தனுஷ் மீதம் செலுத்த வேண்டிய வரியை கட்ட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்

    ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்

    இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காருக்கு நுழைவு வரி கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு நடிகர் தனுஷ் நீதிமன்றத்தில் முறையிட்ட வழக்கு தொடர்பான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்துக்கு வந்தது. நடிகர் விஜய்க்கு தீர்ப்பு வழங்கிய அதே நீதிபதி சுப்ரமணியம் நடிகர் தனுஷுக்கும் ஏகப்பட்ட அறிவுரைகளை காரசாரமாக வழங்கி உள்ளார்.

    பல ஆண்டுகளுக்கு படம்

    பல ஆண்டுகளுக்கு படம்

    2021ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை நடிகர் தனுஷ் ஏகப்பட்ட படங்களில் இப்பவே புக் ஆகி உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். 50 கோடிக்கும் அதிகமாக நடிகர் தனுஷுக்கு சம்பளம் பேசப்பட்டு உள்ளது. இந்நிலையில், இப்படி வரி கட்ட மறுக்கலாமா என நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

    வரி கட்டுங்க தனுஷ்

    வரி கட்டுங்க தனுஷ்

    சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சண்டையை பற்றி சொல்லவே தேவையில்லை. விஜய் - அஜித் ரசிகர்கள் எப்படி மோதிக் கொள்கிறார்களோ அதே அளவுக்கு தனுஷ் - சிம்பு ரசிகர்களும் ஒருவரை ஒருவர் வாரிக் கொள்வதை விடுவதாக தெரிவதில்லை. #வரிகட்டுங்க_தனுஷ் என்கிற ஹாஷ்டேக்கை சிம்பு ரசிகர்கள் டிரெண்ட் செய்து நடிகர் தனுஷை ட்ரோல் செய்து வருகின்றனர்.

    தோ.. வந்துட்டான்

    தோ.. வந்துட்டான்

    சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மாவாக நடித்த நடிகை துஷரா விஜயன் பேசும் பிரபல வசனமான "தோ.. வந்துட்டான் என் தாலியை கொத்தோட அத்துட்டு போக" என்கிற வசனத்தை தான் தனுஷ் ரசிகர்கள் இந்த ஹாஷ்டேக்கை பார்த்ததும் சொல்வார்கள் என சிம்பு ரசிகர்கள் வம்பு செய்து வருகின்றனர்.

    அண்ணன் சம்பளமே

    அண்ணன் சம்பளமே

    அண்ணன் சம்பளமே 10 லட்சம் தான்.. தனுஷ் ஃபேன்ஸ் எல்லாம் காசு போட்டு அண்ணனுக்கு வரி கட்டலாம் வாங்க.. என தனுஷ் போட்டோவை டிபியாக வைத்துக் கொண்டே சில ரசிகர்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

    ஹாலிவுட் ஆக்டர்

    ஹாலிவுட் ஆக்டர்

    #வரிகட்டுங்க_தனுஷ் ஹாலிவுட் ஆக்டரை வச்சு பொளக்குறாங்க சிம்பு ஃபேன்ஸ் என மற்ற ரசிகர்கள் கமெண்டரி செய்யும் விதமாக நிலைமை மாறிடுச்சே என சார்பட்டா பரம்பரை காட்சிகளை வரிசைக் கட்டி மீம் போட்டு மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

    நல்லா வாய்ல வரும்

    நல்லா வாய்ல வரும்

    #வரிகட்டுங்க_தனுஷ்.. Judge:அம்மாடி ஆலமரம் வரி கட்டலனா நல்லா வாய்ல வரும்! என வித விதமாக ட்வீட்களை போட்டு ட்விட்டர் டிரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்துக்கு இந்த ஹாஷ்டேக்கை சிம்பு ரசிகர்கள் கொண்டு வர பெருமுயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

    ரசிகர்கள் சண்டை நல்லதா

    ரசிகர்கள் சண்டை நல்லதா

    இப்படி மாறி மாறி நடிகர்களை பங்கமாக கலாய்ப்பதும் கொச்சைப்படுத்தி மீம்களை போடுவதுமாக ரசிகர்கள் போடும் சமூக வலை தள சண்டை நல்லது அல்ல என்றும் சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி செலுத்தும் விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை நடிகர் தனுஷ் பார்த்துக் கொள்வார் என்றும் கூறி வருகின்றனர்.

    டி44 டைட்டில்

    டி44 டைட்டில்

    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள டி44 படத்திற்கு இன்று பூஜை போடப்பட்டது. இந்த படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன், ராஷி கன்னா மற்றும் பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் டைட்டில் இன்று மாலை வெளியாகும் என்றும் தனுஷ் ரசிகர்கள் ஒரு ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

    English summary
    Simbu fans trolled actor Dhanush for not paying entry tax for Rolls Royce Ghost after a strong condemn came from High Court.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X