மருத்துவமனையில் டி.ராஜேந்தர்.. என்ன ஆச்சு.. பதற்றத்தில் திரையுலகம் !

சென்னை : நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Recommended Video

T.Rajendarக்கு மருத்துவமனையில் சிகிச்சை - சிங்கப்பூருக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்ல முடிவு?

டிராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு மேலாளர் மற்றும் பின்னணி பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர் டி.ராஜேந்தர்.

டி.ராஜேந்தர்

டி.ராஜேந்தர்

டி.ராஜேந்தர் என்கிற பெயரைக் கேட்டதும் சட்டென நம் நினைவுக்கு வருவது அடுக்காக அவர் பேசும் வசனம் தான். வாயிலேயே பீட் போடுவது, மேஜையை தட்டி தாளம் போடுவது, தனக்கே உரிய ஸ்டையில் தலையை அசைத்து ஆடுவது டிஆரின் ஸ்பெஷல். இதனால் தான், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நபராக இருக்கிறார் டி ராஜேந்தர்.

பன்முக வித்தகர்

பன்முக வித்தகர்

80களில் ரஜினி, கமல் என இரு பெரும் நட்சத்திரங்களில் ஆளுமை தமிழ் சினிமாவில் ஆக்கிரமித்து இருந்த போது, புதுமுகம் ராஜா நடித்த ஒரு தலை ராகம் வெளியானது. ஆரம்பத்தில் சரியாக வரவேற்பைப் பெறாத படம், பாடலால் கவனம் பெற்று ஒரு வருடத்திற்கும் மேலாக திரையரங்கில் ஒடி வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு காரணமே அந்த படத்தின் பாட்டும், காதலும், பிரிவும் சோகமும் தான்.

சென்டிமென்ட்

சென்டிமென்ட்

காதல், தங்கை சென்டிமென்ட், அம்மா சென்டிமேட் என அனைத்தும் சும்மா மாஸாக இருக்கும். டி ராஜேந்தர் கடைசியாக வீராசாமி என்ற படத்தை இயக்கி, தயாரித்து, நடித்திருந்தார். இந்த படம் வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து விஜய்சேதுபதி நடித்த கவண் திரைப்படத்தில், பத்திரிக்கை எடிட்டராக நடித்திருந்தார்.

மருத்துவமனையில்

மருத்துவமனையில்

இந்நிலையில், டி ராஜேந்தர் தீடீரென உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.கடந்த நான்கு நாட்களாக மருத்துமனைவியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர், அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ள போதிலும் மேல் மருத்துவ சிகிச்சைக்காக தனது தந்தையை நடிகர் சிம்பு சிங்கப்பூருக்கு அழைத்து செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

என்ன ஆச்சு

என்ன ஆச்சு

இந்த தகவல் இணையத்தில் பரவியதை அடுத்து ரசிகர்கள் பதற்றமடைந்துள்ளனர். நான்கு நாட்களான மருத்துவமனையில் இருக்கிறார் ஆனால், ஊடகத்திலோ , சோஷியல் மீடியாவிலோ எந்த ஒரு தகவலும் இல்லாமல், இப்போது மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்து செல்வதாக கூறப்படுவதால், என்ன ஆச்சு என்ற கவலையில் ரசிகர்கள் உறைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X