TR-ஐ உச்சி குளிர வைத்த சிலம்பரசனின் அரசன் புரோமோ.. கண்ணு கலங்கிட்டாருங்க மனுசன்!

சென்னை: சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படமான அரசன் படத்தின் புரோமோ இன்று வெளியானது. முதலில் தியேட்டரிலும் நாளை காலை யூடியூப் தளத்திலும் புரோமோ வெளியாகவுள்ளது. இந்நிலையில் இன்று சென்னையில் பல தியேட்டர்களில் புரோமோ வெளியிடப்பட்டது. அதில் கமலா தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து புரோமோவைப் பார்த்த சிம்புவின் தந்தை டி. ராஜேந்திரன் ரசிகர்கள் கொடுத்த ஆரவாரத்தை பார்த்து மிகவும் எமோஷனல் ஆகிவிட்டார்.

அதாவது, வெற்றி மாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் படம் அரசன். இந்த படத்தை ஏற்கனவே வெற்றி மாறன் தனுஷ் கூட்டணியில் வெளியான வட சென்னை படத்தின் காலகட்டத்தில் படமாக்குவதாக வெற்றி மாறன் ஏற்கனவே தெரிவித்தார். மேலும் இந்த கதையை வட சென்னை படத்துடன் சேர்த்து திரைக்கதை அமைத்தும் எடுக்கலாம், இல்லையென்றால் தனியாகவும் எடுக்கலாம். இது தொடர்பாக வடசென்னை படத்தின் தயாரிப்பாளரான தனுஷிடம் சொன்னதும் அவர் உடனே உரிமைகளைக் கொடுத்துவிட்டார். அதற்காக அவர் பணமே பெற்றுக் கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.

Simbu Father TR Getting Emotional Tears After Arasan Promo Recevies Blockbuster Response From Fans

இந்நிலையில் ஏற்கனவே படத்தின் பெயர் வெளியிட படக்குழு தரப்பில் சின்ன புரோமோ வெளியிடப்பட்டிருந்தது. இப்படி இருக்கையில், படத்திற்கான பிரத்யேக புரோமோ 5 நிமிடங்களுக்கு உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. புரோமோவைப் பார்ப்பதற்காக தியேட்டர் முன் கூடிய ரசிகர்கள் தியேட்டர் வாசலில் ஏதோ படம் வெளியானால் எப்படி எல்லாம் மேள தாளத்துடன் ஆட்டம் பாட்டமாக இருப்பார்களோ, அதேபோல், ஒரே கொண்டாட்டமாகத் தான் இருந்தார்கள்.

புரோமோ: சென்னை, வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து, நடிகர் சிம்புவின் தந்தையார், டி. ராஜேந்திரன் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு உள்ளிட்டோர் புரோமோவைப் பார்த்தார்கள். இப்படி இருக்கும்போது, புரோமோவில் சிம்புவைப் பார்த்த பின்னர் ரசிகர்கள் கொடுத்த ஆரவாரத்தைப் பார்த்த டி. ராஜேந்திரன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். தனது மகிழ்ச்சியில், தனது இரண்டு கைகளையும் மேலே நோக்கி காட்டி கடவுளுக்கு நன்றி சொன்னார். அதேபோல், மிகவும் எமோஷனலில் ரசிகர்களைப் பார்த்தும் வணங்கினார்.

Simbu Father TR Getting Emotional Tears After Arasan Promo Recevies Blockbuster Response From Fans

உச்சி குளிர்ந்த டி.ஆர்: இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் பலரும் டி.ராஜேந்திரனை உச்சி குளிரை வைத்து விட்டார், சிம்பு. மனுசன் எமோஷனல்ல அழுதுட்டாரே என்று கமெண்ட்டும் போட்டு வருகிறார்கள். புரோமோவைப் பார்த்த ரசிகர்கள் புரோமோவைக் கொண்டாடி வருகிறார்கள். சிம்புவின் லுக், அனிருத்தின் இசை, நெல்சனின் கேமியோ கதாபாத்திரம், சிம்பு ஒரு இடத்தில் தனுஷ் பெயரைச் சொல்லுவது என மொத்த திரையரங்கமும் அதிரும் அளவுக்கு ரசிகர்கள் கொண்டாடிவிட்டார்கள்.

ரசிகர்கள் ஆரவாரம்: தனுஷ் பெயரைச் சொல்லும் காட்சியானது, நெல்சனிடம் தனது கதையைச் சொல்லிவிட்டு, கோர்ட் வளாகத்திற்குள் ஓடுகிறார் சிம்பு, அப்போது நெல்சனைப் பார்த்து, என்னோட கதையில் யாரை சார் நடிக்க வைக்கப் போறீங்க என்று கேட்கிறார். உடனே நெல்சனோ, உங்க மனசுலயே யாராவது இருப்பாங்களே அவங்களை சொல்லுங்க என்று கேட்கிறார். உடனே சிம்புவோ, தனுஷ் சாரை நடிக்க வைங்க சார் நல்லா இருக்கும் என்று கூறுவதைப் போல காட்சி படுத்தப்பட்டுள்ளது. இந்த டயலாக் தியேட்டரில் இருந்த ரசிகர்களை மேலும் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கி விட்டது என்றே கூறலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X