சிம்பு- கௌதம் மேனனின் புதிய படம்..நதிகளிலே நீராடும் சூரியன்!
சென்னை: இயக்குனர் கவுதம் மேனன் நேற்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடினார்.
கவுதம் மேனன் இயக்கவுள்ள படங்கள் குறித்த அறிவிப்புகள் சில நேற்று வெளியானது.
அதை தொடர்ந்து கவுதம் மேனன் சிம்புவை வைத்து இயக்கவுள்ள படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளார்.

மூவர் கூட்டணி
கவுதம் மேனன் - சிம்பு - ஏ.ஆர்.ரஹ்மான் என ரசிகர்களின் பேஃவரட் கூட்டணி இந்த படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இந்த கூட்டணி ஒன்றாக இதற்கு முன் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களில் பணியாற்றி உள்ளது.

ரசிகர்களின் பேராதரவு
கவுதம் மேனன் - சிம்பு - ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் முதல் முறையாக வெளியான படம் "விண்ணைத்தாண்டி வருவாயா". 2010ம் ஆண்டு வெளியாகிய படம் என்றாலும் இன்று வரையில் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் படைப்பாகவே உள்ளது விண்ணைத்தாண்டி வருவாயா.

தொடர் வெற்றி
இவர்களின் கூட்டணி மீண்டும் 2016ம் ஆண்டு "அச்சம் என்பது மடமையடா" படத்தில் ஒன்றிணைந்தது.
ஏ.ஆர். ரஹ்மானின் இசை படத்தில் பெரிதும் பாராட்டப்பட்டு படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தொடர் வெற்றியாக அமைந்தது.

கவுதம் ட்வீட்
இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் படத்திற்கு, "நதிகளிலே நீராடும் சூரியன்" என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது சிம்புவின் 47வது படமாகும்.
இது குறித்து இயக்குனர் கவுதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை இன்பத்தில் ஆழ்த்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











