சிம்பு -கௌதம் மேனன் கூட்டணியின் வெந்து தணிந்தது காடு... விரைவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு!

சென்னை : நடிகர் சிலம்பரசனின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார்.

சிம்புவின் ஈஸ்வரன் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இம்மாத இறுதியில் அவரது மாநாடு படம் ரிலீசாக உள்ளது.

நடிகர் சிலம்பரசன்

நடிகர் சிலம்பரசன்

சிலம்பரசன் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி வருகின்றன. இவரது நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றது. படத்தில் கிராமத்து கெட்டப்பில் நடித்திருந்தார் சிம்பு. இவரது படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

மாநாடு ரிலீஸ்

மாநாடு ரிலீஸ்

அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படம் தீபாவளிக்கு ரிலீசாக இருந்தது. கடைசி நேரத்தில் தீபாவளி பந்தயத்தில் இருந்து பின்வாங்கிய இந்தப் படம் இம்மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவிற்கு ஜோடியாகியுள்ளார்.

வெந்து தணிந்தது காடு படம்

வெந்து தணிந்தது காடு படம்

இந்நிலையில் அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கத்தில் இணைந்து நடித்து வருகிறார் சிம்பு. இந்தப் படத்தை தயாரித்து வருகிறார் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ். இசையமைத்து வருகிறார் ஏஆர் ரஹ்மான். சிம்புவின் 47வது படமாக இந்தப் படம் அமைந்துள்ளது.

மீண்டும் கௌதம் மேனன் -சிம்பு கூட்டணி

மீண்டும் கௌதம் மேனன் -சிம்பு கூட்டணி

அச்சம் என்பது மடமையடா படத்தின் வெற்றிக்கு பிறகு 5 ஆண்டுகள் கழித்து கௌதம் மேனன் -சிம்பு கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை ஏற்காத கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருவது இந்தப் படத்தின் போஸ்டரின் மூலம் தெரிகிறது.

சிறப்பான 2வது லுக் போஸ்டர்

சிறப்பான 2வது லுக் போஸ்டர்

இரண்டாவது லுக்கில் சிம்புவின் போஸ் அவரது ரசிகர்களையே பரிதாபப்பட வைத்துள்ளது. முதல் லுக்கிலும் படுக்கக்கூட இடம் இல்லாத ஒரு அறையில் சிம்பு அழுக்கு கைலி, பனியனுடன் அமர்ந்துள்ளதாக இருந்தது. இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது.

வித்தியாசமான கதைக்களம்

வித்தியாசமான கதைக்களம்

இதேபோல காதல் கதைகளில் மட்டுமே கவனம் செலுத்திவந்த கௌதம் மேனன் இந்தப் படத்தின்மூலம் வித்தியாசமான ஒரு கதையை எடுத்து வருகிறார் என்பது தெரியவருகிறது. இந்தப் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட படப்பிடிப்பு திருச்செந்தூரில் நடைபெற்றது.

விரைவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு

விரைவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு

படத்தில் சிம்புவின் ஜோடியாக காயடு லோஹர் என்பவர் நடித்து வருகிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் மும்பையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு 4 வாரங்களுக்கு தொடர்ந்து நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X