இறந்த ரசிகனின் வீட்டிற்கு சென்று கதறி அழுத சிம்பு: வைரல் வீடியோ

By Siva

Recommended Video

இறந்த ரசிகனின் வீட்டிற்கு சென்று கதறி அழுத சிம்பு- வீடியோ

சென்னை: பேனர் வைக்கும் தகராறில் கொலை செய்யப்பட்ட தனது ரசிகரின் வீட்டிற்கு சென்ற சிம்பு துக்கம் தாங்க முடியாமல் அழுதுவிட்டார்.

சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த சிம்பு ரசிகரான மதன் திருமண நிகழ்ச்சியின்போது பேனர் வைக்கும் தகராறில் கொலை செய்யப்பட்டார். அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டினார் சிம்பு.

இந்நிலையில் மதனின் வீட்டிற்கு இன்று சென்றார் சிம்பு.

சிம்பு

சிம்பு

வந்தா ராஜாவாதான் ரிலீஸுக்கு முன்பு தனக்கு பேனர், கட்அவுட்டுகள் வைப்பதற்கு பதில் பெற்றோருக்கு உடை வாங்கிக் கொடுக்குமாறு சிம்பு முதலில் தெரிவித்தார். இந்நிலையில் அவர் மதனின் வீட்டிற்கு சென்று அவரின் பெற்றோருக்கு உடை கொடுத்து ஆறுதல் கூறினார்.

கண்ணீர்

மதனின் பெற்றோர் அழுவதை பார்த்த சிம்புவால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்டார். மதனின் குடும்பத்தை தான் பார்த்துக் கொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். அவர் அழுதபோது எடுத்த வீடியோவை பார்த்த சிம்பு ரசிகர்கள் என்ன சொல்வது என்று தெரியாமல் ஃபீல் பண்ணியுள்ளனர்.

குடும்பம்

குடும்பம்

மதன் வீட்டிற்கு சென்ற சிம்பு பெயருக்கு போய் பேசிவிட்டு உடனே கிளம்பவில்லை. அங்கு சிறிது நேரம் இருந்து மதன் குடும்பத்தாருடன் நேரம் செலவிட்டார். மதனின் புகைப்படத்தை பார்த்ததும் மீண்டும் அழத் துவங்கிவிட்டார் சிம்பு.

பெருமை

சிம்பு மாதிரி ஒரு நல்ல மனசு யாருக்கும் வராது என்கிறார்கள் அவரின் ரசிகர்கள். தனக்கு பேனர் வைத்து அண்டாவில் பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என்று சிம்பு கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X