பொன்னியின் செல்வனுக்கு சிம்பு சப்போர்ட்.. தனுஷ் பாட்டு வந்ததும் ட்வீட்டான்னு திட்டும் ரசிகர்கள்!
சென்னை: பொன்னியின் செல்வன் டிரைலரை ஷேர் செய்து நடிகர் சிம்பு தற்போது போட்ட ட்வீட் தனுஷ் ரசிகர்கர்களை கோபத்தில் ஆழ்த்தி உள்ளன.
எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல், அஜித் - விஜய்க்கு பிறகு தமிழ் சினிமாவில் தனுஷ் - சிம்பு இடையே தான் பெரும் போட்டி உருவானது.
இந்நிலையில், தனுஷின் நானே வருவேன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியான உடனே இப்படியொரு ஆதரவு ட்வீட் போடுறீங்களே சிம்பு என தனுஷ் ரசிகர்கள் அவரது ட்வீட்டுக்கு கீழ் திட்டி வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் டிரைலர் ரிலீஸ்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான பொன்னியின் செல்வன் டிரைலர் நேற்று வெளியானது. ரஜினிகாந்த், கமல் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

சிம்பு சப்போர்ட்
இந்நிலையில், பொன்னியின் செல்வன் டிரைலரை தனது ட்விட்டர் பகக்த்தில் ஷேர் செய்த நடிகர் சிம்பு Pride of #TamilCinema என பதிவிட்டு ட்வீட் போட்டுள்ளார். சிம்புவின் ட்வீட்டை பார்த்து பொன்னியின் செல்வன் ரசிகர்கள் சந்தோஷப்படாலும், தனுஷ் ரசிகர்கள் அந்த ட்வீட்டை பார்த்து கடுப்பாகி உள்ளனர்.

தனுஷ் பாட்டு வந்ததும்
நேற்று முதல் இன்று மாலை வரை நடிகர் சிம்பு பொன்னியின் செல்வன் படத்தை ஆதரித்து ட்வீட் போடாமல், சரியாக தனுஷின் நானே வருவேன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான வீரா சூரா பாடல் வெளியானும் இப்படியொரு ட்வீட் போடுவது ஏன் என தனுஷ் ரசிகர்கள் நடிகர் சிம்புவை விளாசி வருகின்றனர்.

போட்டா போட்டி
சிம்பு - தனுஷ் போட்டி இன்னமும் நீடித்து வருவதற்கு இதுவொன்றே சாட்சி என்றும் வரும் செப்டம்பர் 15ம் தேதி வெளியாக உள்ள வெந்து தணிந்தது காடு படத்துக்கு தங்களின் சப்போர்ட் இருக்காது என தனுஷ் ரசிகர்கள் நடிகர் சிம்பு ட்வீட் கீழ் கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











