சிம்புவுக்கு கல்யாணம் முடிவாயிடிச்சு.... ஆகஸ்டில் டும்டும்டும்... பொண்ணு யாருன்னு தெரியுமா?

நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Actor Simbu Marriage - சிம்புவுக்கு கல்யாணம் முடிவாயிடிச்சு

சென்னை: நடிகர் சிம்புவுக்கு அவரது சொந்தக்காரப் பெண்ணுடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் திருமணங்களில் ஒன்று நடிகர் சிம்புவின் திருமணம். ஏற்கனவே நயன்தாரா, ஹன்சிகா என இரண்டு நடிகைகளை காதலித்து, அக்காதல்கள் தோல்வியில் முடிந்தது ஊர் அறிந்த விஷயம் தான்.

சமீபத்தில் சிம்புவின் தம்பிக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இதனால் திரையுலகிலும், உறவினர்கள் மத்தியிலும் சிம்புவின் திருமணம் எப்போது எனும் கேள்வி அதிகம் கேட்கப்படுகிறது.

உறுதிப்படுத்திய டி.ராஜேந்தர்

உறுதிப்படுத்திய டி.ராஜேந்தர்

ஒரு மாதத்துக்கு முன்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, சிம்பு திருமணம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவரது தந்தை டி.ராஜேந்தர், "அவர் தன்னுடன் நடித்தவரை அல்ல, பிடித்தவரை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருக்கிறார்", என கூறியிருந்தார். இதன் மூலம் சிம்புவுக்கு வீட்டில் பெண் பார்த்து வருவது உறுதியானது.

திருமணம் பற்றிய புதிய தகவல்

திருமணம் பற்றிய புதிய தகவல்

இதனால் எப்போது வேண்டுமானாலும் சிம்புவின் திருமணம் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், சிம்புவின் திருமணம் குறித்து புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

உறவுக்காரப் பெண்ணுடன் திருமணம்

உறவுக்காரப் பெண்ணுடன் திருமணம்

அதாவது, தனது உறவுக்காரப் பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வரும் ஆகஸ்ட் மாதம் சிம்பு திருமணம் நடக்கும் எனக் கூறப்படுகிறது.

விஷால் திருமணத்திற்கு முன்னர்

விஷால் திருமணத்திற்கு முன்னர்

நடிகர் விஷால் திருமணத்திற்கு முன்னதாகவே சிம்புவின் திருமணம் நடைபெறும் என அவருக்கு நெருங்கிய வட்டார தகவல்கள் கூறுகின்றன. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படங்களில் கவனம்

படங்களில் கவனம்

தற்போது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் சிம்பு ஈடுபட்டுள்ளார். இதற்காக லண்டன் சென்று பயிற்சிகளை மேற்கொண்டார். மீண்டும் லண்டன் செல்ல இருக்கிறார். இதற்கிடையே மாநாடு படத்திலும் சிம்பு நடிக்க உள்ளார் எனக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X