நயன்தாரா பாணியில் சிம்பு செய்த வேலை.. எல்லாம் அதுக்காகத்தானாம்.. வைரலாகும் தகவல்.. ரசிகர்கள் குஷி!

சென்னை: சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் சூப்பரான செய்தி ஒன்று வைரலாகி வருகிறது.

அது என்னவென்றால், லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா போல, கேரளாவுக்கு சென்று ஆயுர்வேத சிகிச்சையை நடிகர் சிம்பு மேற்கொண்டு வருகிறாராம்.

எல்லாம் மாநாடு படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்குத் தான் என்ற பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

அழகு ரகசியம்

அழகு ரகசியம்

கேரளாவை சேர்ந்த நயன்தாராவின் மாறாத அழகு ரகசியத்திற்கு, டாப் பிராண்ட் அழகு சாதன பொருட்களை பயன் படுத்தாமல், இயற்கை முறையிலான ஆயுர்வேத பொருட்களையே நயன்தாரா இதுவரை பயன்படுத்தி வருவது தான் என்கின்றனர். முகப்பரு இல்லாத பூரண பொலிவுக்கும் அதுதான் காரணமாம்.

கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை

கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை

கடந்த ஆண்டு நடிகை நயன்தாரா கேரளாவுக்கு சென்று ஆயுர்வேத சிகிச்சை செய்து கொண்டு, மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்தார் என்ற தகவல்கள் வைரலானது. இந்நிலையில், நடிகர் சிம்பு கேரளாவுக்கு ஆயுர்வேத சிகிச்சைக்காக சென்றுள்ளார் என்ற சூப்பரான அப்டேட்கள் கிடைத்துள்ளன.

எடையை குறைத்து

எடையை குறைத்து

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் அதீத உடல் எடை உடன் நடிகர் சிம்பு நடித்திருந்த நிலையில், பலரும் அவரை ட்ரோல் செய்தனர். இந்நிலையில், மீண்டும் பழைய சிம்புவாக உடல் எடையை குறைத்து கச்சிதமாக மாறி விட்டார். அதற்காக கடுமையாக அவர் உடற்பயிற்சி, பாக்ஸிங் எல்லாம் பண்ண வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தியது.

காதல் கிசுகிசு

காதல் கிசுகிசு

நடிகைகள் நயன்தாரா, ஹன்சிகா உடனான காதல் கதைகள் பிரேக்கப்பில் முடிந்த நிலையில், நடிகை திரிஷா உடன் சிம்பு காதல் செய்து வருவதாக புது வதந்தி ஒன்று வலம் வந்தது. ஆனால், அதனை இருவரும் கண்டு கொள்ளாத நிலையில், அது அப்படியே மறைந்து சென்று விட்டது.

அடுத்த வதந்தி

அடுத்த வதந்தி

மனுஷன் அதில் மாட்டவில்லையே என எண்ணிய சிலர், இப்போ சிம்பு மாநாடு படத்தை விட்டு விட்டு புதிய படமொன்றில் கமீட் ஆகப் போவதாக ஏகப்பட்ட ரூமர்களை கிளப்பி வருகின்றனர். ஆனால், அதையெல்லாம் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கடுமையாக கண்டித்து மறுத்துள்ளார்.

Recommended Video

எங்க அப்பா வாசிக்க SIMBU ஆட | VJ LOKESH CHAT | FILMIBEAT TAMIL
ரசிகர்கள் வெயிட்டிங்

ரசிகர்கள் வெயிட்டிங்

சிம்பு, எஸ்.ஜே. சூர்யா, பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர், கல்யாணி பிரியதர்ஷனி, மனோஜ் பாரதிராஜா என ஏகப்பட்ட நடிகர்கள் கூட்டணியில் இயக்குநர் வெங்கட் பிரபு ஆட உள்ள அரசியல் விளையாட்டு படமான மாநாடு படத்திற்காகத் தான் ஒட்டுமொத்த சிம்பு ரசிகர்களும் காத்திருக்கின்றனர். சிம்புவும் முழு மூச்சோடு அந்த படத்திற்காகத் தான் தற்போது தன்னை தயார் படுத்தி வருகிறார். வரும் அக்டோபர் மாதம் முதல் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X