வாரிசு படத்தில் விஜய்க்காக பாட்டு பாடும் சிம்பு?.. வேற லெவல் அப்டேட்டா இருக்கே!
சென்னை : நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ள நிலையில் படம் பொங்கல் ரிலீசுக்காக தயாராகி வருகிறது.
படத்தின் ரஞ்சிதமே என்ற முதல் சிங்கிள் பாடல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
சில தினங்களிலேயே மில்லியன் கணக்கில் வியூஸ்களை பெற்றுள்ள இந்தப் பாடலை விஜய் மற்றும் மானசி இணைந்து பாடியுள்ளனர். குத்து நம்பராக இந்தப் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நடிகர் விஜய்யின் வாரிசு படம்
நடிகர் விஜய்யின் நடிப்பில் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது உருவாகி வருகிறது வாரிசு படம். தமிழில் தோழா என்ற வெற்றிப் படத்தை நடிகர் கார்த்தி, நாகார்ஜூனா நடிப்பில் கொடுத்த வம்சி படிப்பள்ளியின் இயக்கத்தில் உருவாகி வருகிறது வாரிசு படம். பொங்கலையொட்டி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

வரவேற்பை பெற்ற பர்ஸ்ட் சிங்கிள்
இந்தப் படத்தின் சூட்டிங் ஐதராபாத், விசாகப்பட்டினம், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற நிலையில், தற்போது சூட்டிங் நிறைவடைந்து டப்பிங் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஜூன் மாதத்தில் விஜய் பிறந்தநாளையொட்டி படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது.

ரஞ்சிதமே பாடலை பாடிய விஜய்
இந்தப் பாடலின் சூட்டிங் சமீபத்தில்தான் நிறைவடைந்தது. முன்னதாக சித் ஸ்ரீராம் பாடிய பாடல்தான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய் பாடியுள்ள ரஞ்சிதமே என்ற இந்தப் பாடலைதான் முதலில் வெளியிட வேண்டும் என்று படக்குழு மிகுந்த தீவிரம் காட்டிய நிலையில் ரஞ்சிதமே என்ற இந்தப் பாடல் வெளியாக தாமதமானது. இந்தப் பாடலை விஜய்யுடன் இணைந்து பாடகி மானசி பாடியுள்ளார்.

ஏராளமான வியூஸ்களை பெற்ற பாடல்
லிரிக் வீடியோவாக ரஞ்சிதமே பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சில தினங்களிலேயே சில மில்லியன் வியூஸ்களை பெற்று சாதனை படைத்துள்ளது. படம் வெளியாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட படக்குழு திட்டமிட்டு அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளது. விரைவில் படத்தின் அடுத்த சிங்கிள் அல்லது டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்க்காக பாடவுள்ள சிம்பு?
இதனிடையே படத்தில் நடிகர் சிம்புவும் விஜய்க்காக ஒரு பாடலை பாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் சிம்பு பாடும் பாடல்கள் அனைத்தும் வெற்றிப் பாடல்களாக அமைந்துவரும் நிலையில் விஜய்க்காக சிம்பு பாடவுள்ளது கண்டிப்பாக விஜய் ரசிகர்களுக்கு சிறப்பான விஷயமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். தமன் இசையில் வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

சிறப்பாக நடனமாடும் ராஷ்மிகா
இந்நிலையில் சித் ஸ்ரீராம் வாயசைப்பில் உருவாகியுள்ள பாடலும் மெலடி நம்பராக ரசிகர்களை கவரும் என்று முன்னதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சிம்புவின் வாயசைப்பிலும் வாரிசு படத்தின் பாடல் இடம் பெறவுள்ளது அந்தப் படத்தின் சிறப்பான பிரமோஷனுக்கு உதவி செய்யும் என்று நம்பலாம். இந்தப் படத்தில் விஜய்க்கு ராஷ்மிகா மந்தனா ஜோடியாகியுள்ள நிலையில், அவர் விஜய்க்கு ஈடுகொடுத்து பாடல்களில் நடனமாடியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தளபதி 67க்காக காத்திருக்கும் ரசிகர்கள்
இந்தப் படத்தை தொடர்ந்து தளபதி 67 படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் இணையவுள்ள நிலையில் அந்தப் படத்தின் அறிவிப்பிற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தப் படத்தில் இணையும் நடிகர்கள் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகிவரும் நிலையில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











