»   »  'ஏஏஏ' செட்டில் சிம்பு ஒரே பொறணி பேசுவார்: இயக்குனர்

'ஏஏஏ' செட்டில் சிம்பு ஒரே பொறணி பேசுவார்: இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அன்பானவன் அசராதவன் அடங்காதவன் செட்டில் சிம்பு என்னை பற்றி என் தந்தையிடம் கிசுகிசுக்கள் கூறிக் கொண்டிருப்பார் என்று இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இந்த படத்தில் அவர் அஷ்வின் தாத்தா உள்பட 4 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.

ஆதிக் படத்திற்காக சிம்பு வெயிட் போட்டுள்ளார்.

ரம்ஜான்

ரம்ஜான்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் இரண்டு பாகங்களாக ரிலீஸாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் ரம்ஜானுக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

சிம்பு

சிம்பு

இரண்டாம் பாகத்தில் சிம்பு ஒல்லியாக வருவாராம். முதல் பாகத்திற்காக ஏற்றிய உடல் எடையை குறைக்கும் முயற்சியில் சிம்பு ஈடுட்டுள்ளார். இந்நிலையில் சிம்பு பற்றி ஆதிக் முக்கிய தகவல் தெரிவித்துள்ளார்.

அப்பா

அப்பா

த்ரிஷா இல்லனா நயன்தாரா கதையை படப்பிடிப்பின்போது தான் என் தந்தையிடம் கூறினேன். ஆனால் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் கதையை படப்பிடிப்பு துவங்கும் முன்பே அப்பா கேட்டார் என்கிறார் ஆதிக்.

கிசுகிசு

கிசுகிசு

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் என் தந்தையும் பணியாற்றியுள்ளார். அவரும், சிம்புவும் நல்ல நண்பர்களாகிவிட்டனர். செட்டில் சிம்பு என்னை பற்றி என் தந்தையிடம் கிசுகிசுப்பார். மேலும் என் ரகசியங்களை தந்தையிடம் கூறுவார். படத்தில் அப்பா சின்ன ரோல் செய்திருக்கிறார் என்று ஆதிக் கூறியுள்ளார்.

English summary
AAA director Adhik Ravichandran said that Simbu gossips about him and reveals his secrets to his father on the movie sets.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil