அது மட்டும் கிடையாது.. வெந்து தணிந்தது காடு படத்தின் அப்டேட் சொன்ன கௌதம் மேனன்!

சென்னை : நடிகர் சிம்பு, சித்தி இத்னானி, ராதிகா உள்ளிட்டவர்கள் நடிப்பில் வரும் 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது வெந்து தணிந்தது காடு படம்.

இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

கமல் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஏஆர் ரஹ்மானின் இசைக் கச்சேரி மிகுந்த வரவேற்பை பெற்றது.

 நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு நடிப்பில் வரும் 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது வெந்து தணிந்தது காடு படம். அச்சம் என்பது மடமையடா, விண்ணைத் தாண்டி வருவாயா போன்ற படங்களை தொடர்ந்து இந்தப் படத்தில் சிம்பு -கௌதம் மேனன் இணைந்துள்ளதால் இந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

வெந்து தணிந்தது காடு படம்

வெந்து தணிந்தது காடு படம்

தற்போது சிம்பு -கௌதம் மேனன் இணைந்துள்ள படத்தின் பாடல்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏஆர் ரஹ்மான். சமீபத்தில் வெளியான படத்தின் இசை வெளியீட்டில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

 சிறப்பான மாநாடு படம்

சிறப்பான மாநாடு படம்

மாநாடு படத்திற்கு பிறகு சிம்பு மஹா என்ற படத்தில் நடித்திருந்த நிலையில் அந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனால் டைம் லூப் அடிப்படையில் வெளியான மாநாடு படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வெந்து தணிந்தது காடு படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இந்தப் படத்தில் சித்தி இத்னானி சிம்புவிற்கு ஜோடி சேர்ந்துள்ளார்.மேலும் ராதிகாவும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். படத்தின் ட்ரெயிலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாக உள்ள நிலையில் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

சிறப்பான பிரமோஷன்கள்

சிறப்பான பிரமோஷன்கள்

இதனிடையே படத்தின் பிரமோஷனையும் படக்குழு துவக்கியுள்ளது. படத்திற்காக இயக்குநர் கௌதம் மேனன் கொடுத்துள்ள பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். இதனிடையே இந்தப் படத்தில் வாய்ஸ் ஓவர் இடம்பெறாது என்று அவர் தெரிவித்துள்ளார். அவரது படங்களில் இடம்பெறும் வாய்ஸ் ஓவர்கள் ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

விரைவில் வேட்டையாடு விளையாடு 2 படம்

விரைவில் வேட்டையாடு விளையாடு 2 படம்

மின்னலே என்ற படத்தின்மூலம் ரசிகர்களிடம் அறிமுகமான கௌதம் மேனன் தொடர்ந்து வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால் போன்ற சிறப்பான படங்களையும் கொடுத்து வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக அவர் கமல் நடிப்பில் வேட்டையாடு விளையாடு 2 படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிப்பிலும் கவனம்

நடிப்பிலும் கவனம்

நடிப்பிலும் தொடர்ந்து சிறப்பான கவனத்தை செலுத்தி வருகிறார் கௌதம் மேனன். அவரது நடிப்பில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அடுத்ததாக தளபதி 67 படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X